சித்தா படத்தை முழு மனதுடன் பாராட்டிய நயன்தாரா.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: 2023ம் ஆண்டின் மிகச்சிறந்த படம் சித்தா என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தை வெகுவாக பாராட்டினார்.
தமிழ் சினிமாவின் சார்மிங் ஹீரோ என்று பெயரை எடுத்த சித்தார்த். இவர் தயாரித்து நடித்திருந்த படம், சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத் போன்ற கவனத்தை ஈர்க்கும் படங்களை அளித்த எஸ்.யு அருண்குமார் இந்த படத்தையும் இயக்கியிருந்தார். சித்தப்பாவிற்கும் அவரது அவரது அண்ணன் மகளுக்கும் இடையே இருக்கும் பாசத்தையும் உறவையும் பற்றி பேசும் படமாக இருந்தது இத்திரைப்படம்

சித்தா திரைப்படம், பாலியல் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுவதை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், குட் டச், பேட் டச், குழந்தைகளிடம் வரம்பு மீறி செயல்படுவோர் குறித்த விஷயத்தை அப்பட்டமாக காட்டி உள்ளது. இதுவரை விஜய் சேதுபதியை வைத்து மூன்று படங்களை இயக்கிய அருண், சித்தா படம் மூலம் முதன் முறையாக சித்தார்த்துடன் கைக்கோர்த்துள்ளார். இவர்களின் இந்த புது கூட்டணி ரசிகர்களிடம் வெற்றி பெற்றுள்ளது.
ஓடிடியில் ரிலீஸ்: கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் சேர்ந்து வேறு சில புதுப்படங்களும் வெளியானதால், இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனாலும், சித்தா படத்தை பார்த்தவர்கள் நல்ல விமர்சனத்தையே கொடுத்துவந்தனர். இப்படத்துடன் வெளியான பிற படைப்புகள் ஓடிடியில் வெளியாகி விட்டன. ஆனால் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு மட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 17ஆம் தேதி வெளியானது. அப்போது படத்தைப் பார்த்த பலர் உண்மையில் சித்தா படம் ஒரு நல்ல படம் என்று புகழ்ந்தனர்.
2023ம் ஆண்டின் சிறந்த படம்: தற்போது நயன்தாரா சித்தார்த்துடன் இணைந்து டெஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், சித்தா படம் குறித்து பேசி உள்ள அவர், 2023 ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்களில் சித்தா திரைப்படமும் ஒன்று. சித்தார்த் இது உங்களுடைய படங்களிலேயே மிகச் சிறந்த படம். இயக்குநர் அருண்குமார் என்ன மாதிரியான ஒரு அற்புதமான கலையை உருவாக்கி இருக்கிறீர்கள். ஒரு அற்புதமான படத்தை கொடுத்த படக்குழுடிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டு என தெரிவித்துள்ளார். இதே போல வெற்றிமாறன்,உலகநாயகன் கமலஹாசன் என அனைவரும் படத்தை பாராட்டினர்.
நயன்தாராவின் டெஸ்ட்: நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்தை YNOT ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று மற்றும் தேசிய விருது பெற்ற மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். இதில், நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











