Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அயன் லேடியாக மாறப்போகிறாரா லேடி சூப்பர்ஸ்டார்? ஜெயலலிதா பயோபிக் பற்றி புதிய தகவல்!
சென்னை: லிங்குசாமி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம்தான் இப்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக்காக உள்ளது. ஏற்கனவே பாரதிராஜா, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் பயோபிக் படத்தை இயக்க உள்ளதாக சொல்லியிருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமியும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை சசிகலாவின் உறவினரான திவாகரனின் மகன் ஜெயானந்த் தயாரிக்க உள்ளதாகவும், அதை லிங்குசாமி இயக்க உள்ளார் என்றும் ஜெயானந்த் அறிவித்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவர்தான் நிச்சயமாக நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் பல தடைகளைத் தாண்டி வெற்றிபெற்று லேடி சூப்பர்ஸ்டாராக கெத்து காட்டிக்கொண்டிருப்பவர் நயன். அறம் படத்தில் கலெக்டராக நடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்தன. கம்பீரமான நடை, எதையும் தாங்கும் மனவலிமை என ஜெயலலிதாவின் பல குணங்கள் நயன்தாராவிடம் உள்ளது. அதனால் அவர் நடித்தால் நிச்சயம் பொருத்தமாக இருக்கும் என சினிமா ஆர்வளர்கள் கருதுகின்றனர்.
இப்படத்திற்க்கு ஏகப்பட்ட போட்டி இருப்பதால், தேசிய அளவில் முக்கிய புள்ளிகளை அணுகி ஜெயலலிதாவைப் பற்றிய சுவாராஸ்யமான தகவல்களை சேகரித்து வருகிறாராம் லிங்கு. சண்டக்கோழி 3 திரைப்படம் துவங்குவதற்கு முன்பு ஜெயலலிதா பயோபிக் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கலாம்.