யஷ் படத்தில் அக்கா கதாபாத்திரம்.. டபுள் மடங்கு சம்பளம் கேட்டாரா நயன்தாரா?.. தீயாய் பரவும் தகவல்!
பெங்களூர்: ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்தாலும் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு நடிகை நயன்தாராவுக்கு அமையவில்லை.
டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே நயன்தாரா கைவசம் தற்போது உள்ளன. அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில், கன்னட சினிமாவிலும் அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஜிஎஃப் படத்தின் நாயகன் யஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
சிரஞ்சீவிக்கு தங்கை: மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிபர் படத்தில் அவருக்கு தங்கையாக மஞ்சு வாரியர் நடித்திருப்பார். அதே படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில், அக்காவாக யஷ் படத்தில் அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரீனா கபூர் எஸ்கேப்: மாதவன் நடித்த நளதமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்த கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் யஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தப்படத்தில் அவரது அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கரீனா கபூர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் தற்போது விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அக்கா நயன்தாரா: கரீனா கபூருக்கு பதிலாக நடிகை நயன்தாராவை யஷ்ஷின் அக்காவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், இந்த படத்தில் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
20 கோடி சம்பளம்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது புதிய படங்களுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். கேஜிஎஃப் ஹீரோ யஷ் படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருப்பதாக கூறுகின்றனர். அந்த கதாபாத்திரம் படத்திற்கே முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நயன்தாரா கேட்கும் தொகையைக் கொடுத்து நடிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











