ஹனிமூனே போகல.. அதுக்குள்ள திருமணக் கொண்டாட்டம் ஓவர்.. படப்பிடிப்புக்குத் திரும்பும் நயன் !

சென்னை : நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி ஓரிரு நாளில் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

காதல் ஜோடியாக வலம் வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ந் தேதி கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நயன் , விக்கி திருமண நிகழ்ச்சியை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருப்பதால், திருமணத்தில் ஏராளமான கெடுபிடி இருந்தது. விக்னேஷ் சிவன் மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓரிரு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம்தான் இன்னமும் பேசு பொருளாக உள்ளது. திருமணத்தை முடித்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம், செய்தியாளர் சந்திப்பு என புதுமண தம்பதிகள் மிகவும் பிஸியாக இருந்து வந்தனர். இதையடுத்து, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நயன்தராவின் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியதற்கான கேரளா சென்றனர்.

கேரளாவில் நயன்தாரா

கேரளாவில் நயன்தாரா

நயன்தாராவின் அம்மா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் மகளின் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லையாம். இதனால்தான் திருமணத்தை முடித்த கையோடு விக்கியும் நயன்தாராவும் நேரடியாக தனது சொந்த ஊரான கேரள மாநிலம் திருவல்லாவுக்கு சென்று அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.

ஊழியர்களை மகிழ்ச்சி

ஊழியர்களை மகிழ்ச்சி

மேலும்,கேரளாவில் நயன்தாராவிற்கு பிடித்த ரெஸ்டாரண்டுக்கு திடீரென கணவருடன் சென்று அங்கிருந்த ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதையடுத்து , ஆலப்புழாவில் உள்ள மிகவும் பழமையான செட்டிக்குளங்கரா கோயி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இருவரும் இன்னும் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தன.

படப்பிடிப்பில் கவனம்

படப்பிடிப்பில் கவனம்

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி ஓரிரு நாளில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா, தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அடுத்த வாரம் கலந்து கொள்ள இருப்பதாகவும் இதில் கலந்து கொள்வதற்காக கேரளாவிற்கு சென்ற நயன்தாரா நாளை மறுதினம் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X