ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறும் நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் அந்த படத்தில் அப்படியொரு ஸ்டன்ட் இருக்காம்

சென்னை: விக்னேஷ் சிவன் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Nayanthara Vignesh Shivan Couple Ring | Have You Noticed? | Netrikann

அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் என தமிழில் மூன்று படங்களில் கமீட் ஆகியுள்ளார் நயன்தாரா.

இதில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அவள் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'நெற்றிக்கண்' படத்தில் தான் அதிரடியான ஸ்டன்ட் காட்சிகள் இருக்காம்.

ரவுடி பிக்சர்ஸ்

ரவுடி பிக்சர்ஸ்

தனுஷின் உண்டர்பார் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கப் போகும் படத்திற்கு 'நெற்றிக்கண்' என்ற ரஜினிகாந்த் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

மிரட்டல் போஸ்டர்

மிரட்டல் போஸ்டர்

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு ரிலீசான ஹாரர் த்ரில்லர் படமான ‘அவள்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா லீடு ரோலில் நடித்து வரும் ‘நெற்றிக்கண்' போஸ்டர் வெளியாகி மிரட்டி இருந்தது. பிராய்லி மொழியில் தலைப்பும், ரத்தக்கறை, கை விலங்கு என ஏகப்பட்ட விஷயங்கள் அதில் இருந்தன.

பார்வையற்றவரா

பார்வையற்றவரா

பிராய்லி மொழியில் தலைப்பு எழுதப்பட்டிருந்ததும், நெற்றிக்கண் என டைட்டில் வைக்கப்பட்டு இருந்ததும், இந்த படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடிக்க உள்ளார் என்பதை தெளிவு படுத்தியது. லேடி சூப்பர்ஸ்டாரின் 65வது படமான நெற்றிக்கண் சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகி வருவதாக படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் சில தகவல்களை ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

செம ஸ்டன்ட்

செம ஸ்டன்ட்

நெற்றிக்கண் படத்தில் அதிரடி நிறைந்த பல ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும், சுமார் 60 சதவீத ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துள்ளதாகவும், லாக்டவுன் தளர்வு காரணமாக எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த லாரன்ஸ் கிஷோர், இந்த படத்தில் வேற மாதிரியான நயன்தாராவின் அதிரடியை ரசிகர்கள் கண்டு மிரள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட்டில் ஷூட்டிங்

ஆகஸ்ட்டில் ஷூட்டிங்

இது ஒரு புறம் இருக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா நடிக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோடை விடுமுறையில் மூக்குத்தி அம்மன் தரிசனம் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஆயுத பூஜைக்கு அந்த தரிசனம் கிடைக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X