ஷாருக்கானுடன் ஜோடி சேருவாரா நயன்தாரா? இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்!
சென்னை : ஷாருக்கான் படத்தில் நடிக்க, அட்லி நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் செய்தி இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
அட்லி முதன்முறையாக இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா, அடுத்ததாக பிகில் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா இந்தி திரைப்படத்தில் நடிக்க வந்திருக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான்
இயக்குனர் அட்லி கடைசியாக பிகில் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல்ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷாருக்கானை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நயன்தாரா ஹேஷ்டேக்
இந்நிலையில், இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்த, நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஏற்றுக்கொள்வார்
தமிழ், தெலுங்க, மலையாளம்,கன்னட திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா. இந்தியில் இதுவரை நடித்தது இல்லை. இதனால் இந்த அழைப்பை அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
நயன்தாரா ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நெற்றிக்கண் திரைப்படமும் விரைவில் ஒடிடியில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











