Nayanthara 75 - நயன்தாரா 75.. வெளியானது பெயர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ.. வேற லெவல் நயன்

சென்னை:Nayanthara 75 (நயன்தாரா 75) நயன்தாரா நடிக்கும் அவரது 75ஆவது படத்தின் பெயர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருக்கிறது.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.

Nayantharas 75th Movie Name and Glimpse Video Was out now

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இப்போதைய படங்கள்: நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஜெயம் ரவியுடன் இறைவன் படத்திலும், மண்ணாங்கட்டி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் இறைவன் படம் சமீபத்தில் வெளியானது. திருமணமாகி குழந்தைகள் பெற்றாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வத்துடன் இருக்கிறார். அவருக்கு விக்னேஷ் சிவனும் முழுக்க முழுக்க சப்போர்ட்டாக இருக்கிறார்.

இதிலும் உதாரணம்தான்: நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா. ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பக்கம் நயன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.

நயன் 75: இந்நிலையில் நயன் தாரா நடிக்கும் 75ஆவது படத்தின் பெயர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருக்கிறது. பூர்ணி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்துக்கு அன்னபூரணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடையே இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X