Annapoorani: நயன்தாராவின் அன்னபூரணி முதல் நாள் வசூல்.. சுமாரா? சூப்பரா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லீ, கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகை ரேணுகா, பூர்ணிமா ரவி என பலர் நடித்துள்ளனர்.

நடிகை நயன்தாரா: முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் அன்னபூரணி படத்தில் பிராமணப் பெண்ணின் பிரச்சனைகளைப் பேசும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அன்னபூரணி: கடும் போட்டிக்கு மத்தியில் அன்னபூரணி திரைப்படம் நேற்று அதிக திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் பாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார் ஆகியோர் அவர்களின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் கதை: ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த அன்னபூரணி (நயன்தாரா) செஃப் ஆக வேண்டும் என்ற கனவுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். குறிக்கோளுடன் இருக்கும் நயன்தாராவால் இன்ஸ்பயர் ஆகும் சத்யராஜ் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். இறுதியில், அன்னபூரணியின் ஆசை நிறைவேறியதா, அவரது குடும்பம் அதை ஏற்றுக்கொண்டதா என்பது தான் படத்தின் கதை.
முதல் நாள் வசூல்: நேற்று வெளியான அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம் முதல் நாளில் 1.5 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அளவில் 0.60 கோடியை தான் வசூலித்துள்ளது.



Click it and Unblock the Notifications











