Nayanthara: நயன்தாரா லீட் கேரக்டரில் கலக்கும் அன்னபூரணி.. சென்சார் மற்றும் ரன்டைம் அப்டேட் இதோ!

சென்னை: நடிகை நயன்தாராவின் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் நயன்தாரா. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் அவர் என்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்த இறைவன் படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே கொடுத்தது.

Nayantharas Annapoorani movie censored U and its run time revealed

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்த தன்னுடைய திரையுலக பயணத்தில் ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார். எந்த கேரக்டராக இருந்தாலும் நயன்தாரா தன்னை அதில் பொருத்திக் கொள்வார். அறம் போன்ற படங்களில் லீட் கேரக்டர்களில் நடித்தாலும் சரி, ஜாலியான படங்களில் நடித்தாலும் சரி முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும் சரி எந்த கேரக்டரிலும் நயன்தாராவை ரசிகர்கள் ஏற்கும்வகையில் அவரது நடிப்பு காணப்படுகிறது.

பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: தமிழ், தெலுங்கு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது போதாதென்று பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார் நயன்தாரா. சமீபத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்து வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் சில தினங்களிலேயே இணைந்தது. இந்தப் படத்தில் நயன்தாராவின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னபூரணி படம்: தமிழிலும் விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுடன் ஜோடி போட்டு அதிகமான படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. விரைவில் கமலுடனும் இவர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்துள்ள அன்னபூரணி படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய ப்ரமோஷனாக அமைந்துள்ளது.

அன்னபூரணி படத்திற்கு யூ சான்றிதழ்: இதனிடையே இந்தப்படத்தின் சென்சார் நிறைவடைந்து படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படம் 2 மணிநேரங்கள் மற்றும் 26 நிமிடங்கள் ரன்டைம் கொண்டுள்ளதாகவும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த நாயகி, தான் விரும்பும் சமையல் தொழிலுக்காக தன்னை எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டு வெற்றியை நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறார் என்பதை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

நயன்தாரா ஜோடியாக இணைந்த ஜெய்: இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். ராஜா ராணி படத்தை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் கைக்கோர்த்துள்ள நிலையில், இவர்களின் கெமிஸ்ட்ரி மீண்டும் வொர்க் அவுட் ஆகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்தப் படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, கேஎஸ் ரவிக்குமார், சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X