Nayanthara Exclusive: ராஷ்மிகா மந்தனாவுடன் மோதும் நயன்தாரா.. அன்னபூரணி பிரத்யேக ஸ்டில்ஸ்!
சென்னை: கடந்த செப்டம்பர் 7ம் தேதி நடிகை அனுஷ்கா நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி மற்றும் நயன்தாரா, ஷாருக்கான் நடித்த ஜவான் படங்கள் ஒரே நாளில் மோதின.
ஆனால், ஜவான் திரைப்படம் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி தியேட்டரில் சாதனை படைத்தது. மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இதுவரை அதிக மணி நேரங்கள் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

ஆனால், அனுஷ்கா படம் தியேட்டரில் ஓடாமல் காணாமல் போன நிலையில், ஓடிடியில் ஓரளவுக்கு ஓடியது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் ராஷ்மிகா மந்தனா மற்றும் நயன்தாரா நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் மோத உள்ளன. இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
சோலோவாக சாதிப்பாரா லேடி சூப்பர்ஸ்டார்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் அதிரடியாக நடித்து அசத்திய நயன்தாரா அறம், மூக்குத்தி அம்மன் படங்களுக்கு பிறகு சோலோ ஹீரோயினாக நடித்து பெரிய வெற்றிகளை பெறவே இல்லை. ஓ2, நெற்றிக்கண், கனெக்ட் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ஓடாமல் போய் விட்டன. இந்நிலையில், ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். அட்லீ ராஜா ராணி படத்தில் நயனுக்கு ஹிட் கொடுத்ததை போல நிலேஷ் கிருஷ்ணா லேடி சூப்பர்ஸ்டாரின் 75வது படத்தை தரமாக கொடுப்பாரா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

ராஜா ராணி காம்போ: மேலும், இந்த படத்தில் நடிகர் ஜெய் மற்றும் சத்யராஜ் என அப்படியே ராஜா ராணி காம்போவை வைத்துக் கொண்டு நிலேஷ் கிருஷ்ணா படம் இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தில் சமைப்பதற்காக நடிகை நயன்தாரா டூப் பயன்படுத்தாமல் நிஜமாகவே சமையல் கற்றுக் கொண்டு சமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அந்த படத்தின் பிரத்யேக ஸ்டில்கள் டிரெண்டாகி வருகின்றன.

ராஷ்மிகா - நயன்தாரா மோதல்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. வரும் டிசம்பர் 1ம் தேதி அந்த படம் வெளியாகும் அதே நாளில் தான் நயன்தாரா நடித்த அன்னபூரணி படமும் வெளியாகிறது. அனிமல் படத்துக்குத்தான் இதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











