Nayanthara: காதம்பரி நயன்தாராவின் காதுகளுக்கு மட்டும் இத்தனை அலங்காரமா.. அழகுடோய்.. போட்டோஸ் பாருங்க
சென்னை: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, படங்களைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வையை முழுவதுமாக கவர்ந்துள்ளன.
சமீபத்தில் நயன்தாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், முகத்தை விட அவரது காதில் அணிந்திருக்கும் பலவிதமான கம்மல்கள் மற்றும் தோடுகள்தான் ரசிகர்களின் கவனத்தை முதலில் ஈர்த்துள்ளன. ஒரு காதில் பல அடுக்குகளாக அணிந்திருக்கும் காதணிகள், அவரின் மினிமல் லுக்கிற்கு ஸ்டைலிஷ் டச் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த புகைப்படங்களில் அதிக மேக்கப் இல்லாமல், எளிமையான உடை, கொண்டை முடி, கருப்பு நெயில் பாலிஷ் மற்றும் கோல்டன் இயர்ரிங்ஸ் என வித்தியாசமான தோற்றத்தில் நயன்தாரா காட்சியளிக்கிறார். "காதுக்கு மட்டும் இவ்வளவு அலங்காரமா?", "செம்ம ஸ்டைல்", "எப்போதும் போல கிளாஸி லுக்" என்று ரசிகர்கள் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

காதம்பரி நயன்: நயன்தாரா ரசிகர்களுக்கு "காதம்பரி" என்ற பெயர் எப்போதும் ஸ்பெஷல்தான். காரணம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரவுடிதான்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் காதம்பரி. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் திருமணம் செய்து கொண்ட இருவரும், தற்போது தங்களது இரட்டை குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையையும், சினிமா பயணத்தையும் சமநிலையாக முன்னெடுத்து வருகின்றனர்.
தனி டிரெண்ட்: படங்கள், தயாரிப்பு, குடும்பம் என பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது இப்படி ஸ்டைலான போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதை நயன்தாரா வழக்கமாகவே வைத்திருக்கிறார். இந்த முறையும் அவரது காதணிகளே இணையத்தில் தனி டிரெண்டாக மாறியுள்ளன.

அடுத்த படங்கள்: நயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால் அது, டாக்ஸிக் படம் தான். இந்த படத்தில் அவர் யாஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று சில ரசிகர்களும் லேடி டானாக நடிக்கிறார் என்று சில ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் படம் வெளியானால் தான் இவரது கதாபாத்திரம் என்ன என்று தெரியும். அதேபோல் கவின் உடன் இணைந்து நடித்த ஹாய் படமும் ரிலீஸ்க்குத் தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
