மூக்குத்தி அம்மன் 2வில் யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க.. பொள்ளாச்சியில் இருந்து வந்த செம அப்டேட்!

சென்னை: நடிகை நயன்தாரா பொள்ளாச்சியில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பில் படு பிசியாக உள்ளார். அவரை சுற்றி தேவையற்ற வதந்திகள் எல்லாம் உலாவி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சுந்தர். சி இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது.

முதல் பாகத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவுடன் சுந்தர். சி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரெஜினா கசாண்ட்ரா முக்கிய வில்லியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், மகாராஜா படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டிய நடிகர் உள்பட பலர் தற்போது அந்த படத்தில் இணைந்துள்ள லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொள்ளாச்சியில் நடைபெறும் ஷூட்டிங்கில் இணைந்துள்ள இளம் நடிகை லலிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுந்தர். சி மற்றும் படத்தில் நடித்து வரும் நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து நயன்தாரா ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் மாஸ் ஹிட்: லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என நயன்தாரா சொன்னாலும் அவரது ரசிகர்கள் அவரை அப்படித்தான் அழைத்து வருகின்றனர். ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து ஒரு சில நடிகைகள் மட்டுமே மிகப்பெரிய வெற்றிகளை குவித்துள்ளனர். மாயா, அறம், மூக்குத்தி அம்மன் என பல வெற்றிப் படங்களை நடிகை நயன்தாரா கொடுத்துள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் ராக்காயி, மண்ணாங்கட்டி மற்றும் மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக் உள்ளிட்ட பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

100 கோடி பட்ஜெட்: தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களை வைத்தே சமீப காலமாகத்தான் 100 கோடி பட்ஜெட்டில் படங்கள் உருவாகி வருகின்றன. ஹீரோயின்களை வைத்து இத்தனை கோடி பட்ஜெட்டில் பெரிதாக படங்கள் வராது. எந்தவொரு தயாரிப்பாளரும் அதிக ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால், நயன்தாராவையும் சுந்தர். சியையும் நம்பி ஐசரி கணேஷ் 100 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். பீரியட் போர்ஷன் எல்லாம் படத்தில் தரமாக உருவாகவுள்ளதாக கூறுகின்றனர்.

மகாராஜா வில்லன்: மூக்குத்தி அம்மன் 2வில் இணைந்துள்ள நடிகை லலிதா பொள்ளாச்சியில் இயக்குநர் சுந்தர். சி, மகாராஜா படத்தில் வில்லனாக மிரட்டிய நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி, அரண்மனை படங்களில் சுந்தர். சி இயக்கத்தில் நடித்து வரும் விச்சு விஸ்வநாத் உள்ளிட்டோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். நயன்தாராவுடன் ஒரு செல்ஃபி எடுத்து போடுங்க என பலரும் அவரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மூக்குத்தி அம்மன் 2 நிச்சயம் நயன்தாராவுக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர். சி ஏற்கனவே தமன்னாவை வைத்து எடுத்த அரண்மனை 4 திரைப்படமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், சூர்யாவை வைத்து அவர் கருப்பு படத்தை இயக்கி வருகிறார். அந்த படமும் சாமி படமாக இருக்குமா என்பது கூடிய விரைவிலேயே தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X