மூக்குத்தி அம்மன் 2: குடும்பத்தோடு விரதமிருக்கும் நயன்தாரா.. குஷ்பூ கொடுத்த பரிசு என்னனு தெரியுமா?

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பட பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய ஐசரி கணேஷ், இரண்டாம் பாகம் பூஜை போடும் ஒரு வாரத்திற்கு முன்பே நயன்தாரா, தன்னுடைய குழந்தைகளுடன் விரதத்தை தொடங்கி விட்டார் என்றார்.

ரேடியோவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழக்கிய ஆர்ஜே பாலாஜிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ரேடியோவில் பிரபலமானதை தொடர்ந்து சினிமாவிலும் காமெடியனாக களமிறங்கினார். ஒரு கட்டத்தில் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக மாறிய ஆர்ஜே.பாலாஜி, என்ஜே சரவணனுடன் இணைந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். 2020ம் ஆண்டு இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதில் அம்மனாக நயன்தாரா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Mookuthi Amman 2 Nayanthara sundar c 2

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஆர்ஜே பாலாஜி கூறிய நிலையில், முக்கியமாக மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதிலாக த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசிய ஐசரி கணேஷ், ஆர் ஜே பாலாஜி, முதன் முதலில் படத்தின் பெயர் மூக்குத்தி அம்மன் என்று சொன்னதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஏன் என்றால், மூக்குத்தி அம்மன், என்னுடைய குலதெய்வம் அந்த பெயரில் அந்த பெயரிலேயே படம் எடுக்க நான் ஒத்துக்கொண்டேன், அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதன் பிறகு அம்மன் சம்பந்தமான எந்த ஒரு படத்தையும் நான் பார்க்கவே இல்லை. இதனால் நாமே ஒரு அம்மன் படத்தை எடுக்கலாம் என்ற யோசனை வந்த போது. மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகமாக எடுக்கலாம் என்று யோசித்தேன்.

Mookuthi Amman 2 Nayanthara sundar c 2

மேலும், பிரான்சைஸ் படம் என்றாலே அது சுந்தர் சி தான் என்று அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த படத்தின் எடுக்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துவிட்டேன். அவர் இந்த கதையை என்னிடம் சொன்னதும் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டது. இப்படி ஒரு கதையை நான் கேட்டதே இல்லை இந்த படம் எடுக்க எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன் சுந்தர் சி மூன்று வீரல்களை காட்டினார். நானும் ஓகே சொல்லிவிட்டேன் என்றார்.

குஷ்பூ கொடுத்த பரிசு: தொடர்ந்து பேசிய ஐசரி கணேஷ், இப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததற்கு பலமாக இருந்தது நயன்தாரா தான். முதல் பாகத்தின் படம் பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, நயன்தாரா விரதம் இருந்தார். அதே போல இரண்டாம் பாகம் பூஜை போடும் ஒரு வாரத்திற்கு முன்பே தன்னுடைய குழந்தைகளுடன் விரதத்தை தொடங்கி விட்டார் என்று ஐசரி கணேஷ் அந்த நிகழ்ச்சியில் பேசினார். பட பூஜையில், மத்திய அமைச்சர் ஏ.எல்.முருகன், குஷ்பூ, மீனா, ரெஜினா காஸாண்ட்ரா, கேஎஸ் ரவிக்குமார், சுந்தர் சி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது குஷ்பூ, மீனாவும் இணைந்து திரிசூலத்தை நயன்தாரா கையில் கொடுத்தனர்.

Mookuthi Amman 2 Nayanthara sundar c 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X