நயன்தாரா மீண்டும் அம்மன் அவதாரம்.. சுந்தர் சி, குஷ்புவிடம் வந்த மூக்குத்தி அம்மன் 2 பூஜை இன்விடேஷன்!

சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா ஹேர் கலரிங் செய்த மாடர்ன் அம்மனாக நடித்திருந்தார். அமீர்கான் இந்தியில் நடித்து ஹிட்டான பிகே படத்தை உல்டா செய்து தான் மூக்குத்தி அம்மன் படத்தையே எடுத்தேன் என ஆர்.ஜே. பாலாஜி ஒப்புக்கொண்டார். சூர்யாவை வைத்து எந்த படத்தை உல்டா செய்து இயக்கி வருகிறாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

அது ஒரு பக்கம் இருக்க, மூக்குத்தி அம்மன் 2 படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை என்றும் நயன்தாராவை வைத்து சுந்தர். சி அந்த படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், படபூஜையின் இன்விடேஷனையே ஐசரி கணேஷ் சுந்தர். சியின் இல்லத்துக்கே வந்து கொடுத்துள்ள வீடியோ தற்போது வெளியானது.

Nayanthara Mookuthi Amman 2 Sundar C 2

தமன்னாவை வைத்து அரண்மனை 4 படத்தை பேய்த்தனமான ஹிட்டாக்கிய சுந்தர். சி 100 கோடி பாக்ஸ் ஆபீஸையும் ருசி பார்த்தார். இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டாரை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கினால் குறைந்த பட்சம் 200 கோடியாவது பிசினஸ் ஆகும் என கோடம்பாக்கம் எதிர்பார்க்கிறது.

மூக்குத்தி அம்மன்: ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி, ஆர்.ஜே. பாலாஜி, மெளலி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் கோஷ், அபி நக்‌ஷத்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான படம் தான் மூக்குத்தி அம்மன். ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் கார்ப்பரேட் சாமியாரை எதிர்க்க அம்மனே இறங்கி வருவது போன்ற திரைக்கதையை ஆர்ஜே பாலாஜி உருவாக்கி லீடு ரோலில் லேடி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்தும் இருப்பார். அந்த படம் அவருக்கு எல்கேஜி படத்தைத் தொடர்ந்து வெற்றிப்படமாக மாறியது.

மூக்குத்தி அம்மன் 2 பூஜை எப்போ?: வரும் மார்ச் 6ம் தேதி மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படபூஜை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட படத்தின் பூஜைக்கான அழைப்பிதழை கோயிலில் இருந்து எடுத்துக் கொண்டு சுந்தர். சி வீட்டுக்கே வந்து ஐசரி கணேஷ் கொடுக்கும் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா எங்கே காணோம்: படத்தின் ஹீரோயினான நயன்தாராவுக்கு அழைப்பிதழ் தரும் வீடியோ ஏன் வெளியிடவில்லை என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். வரும் 6ம் தேதி நடைபெறும் படபூஜைக்கு நயன்தாரா வருவாரா? அல்லது டைரக்டாக படப்பிடிப்புக்கு மட்டும்தான் வருவாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குஷ்பு டான்ஸ் இருக்குமா?: அரண்மனை 4 படத்தில் சிம்ரன் உடன் இணைந்து குஷ்பு கிளைமேக்ஸில் ஆடிய நடனம் படத்துக்கு பெரிய பலமாக மாறியது. சுந்தர். சி மற்றும் குஷ்புவை வீட்டிற்கே சென்று ஐசரி கணேஷ் பத்திரிகை கொடுத்து அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த படத்திலும் குஷ்பு ஒரு சாமி பாட்டுக்கு நடனமாடினால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுந்தர். சி ஸ்டைலில் அரண்மனை சீரிஸ் பார்த்த ரசிகர்களுக்கு மூக்குத்தி அம்மன் 2 படம் எப்படி வரும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X