செகண்ட் ஹனிமூன் போன விக்னேஷ் -நயன்... கணவருக்காக நயன்தாரா செய்த வேலையை பாருங்க!
பார்சிலோனா : திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடினர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி.
இதையடுத்து தனது படங்களில் பிசியாக நடித்து வந்தார் நயன்தாரா. ஜவான், இறைவன் படங்களில் இவர் பிசியாக நடித்து வருகிறார்.
இதனிடையே சூட்டிங்கில் கிடைத்த கேப்பை சிறப்பாக பயன்படுத்தி தற்போது பார்சிலோனாவில் தங்களது இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா ஐயா படத்தில் நடிக்க துவங்கியதிலிருந்தே தொடர்ந்து பிசிதான். கோலிவுட்டில் இவரது கை அப்போதிலிருந்து தற்போது வரை ஓங்கியுள்ளது. திருமணம் இவரது இமேஜை, கேரியரை சிறிதும் பாதிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் ஷாருக்குடன் இணைந்து ஜவான் மற்றும் தமிழில் ஜெயம் ரவியுடன் இறைவன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

விக்னேஷ் சிவனுடன் திருமணம்
சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை திருமணம் முடித்த நயன்தாரா, திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், லைக்ஸ்கள் அள்ளியது.

அடுத்தடுத்த படங்களில் பிசி
தொடர்ந்து நாடு திரும்பிய அவர், ஜவான், இறைவன் படங்களில் பிசியாக, தன்னுடைய ஏகே62 படத்திற்கான வேலைகளில், முன் தயாரிப்பு பணிகளில் பிசியானார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தற்போது இந்த ஜோடி கிடைத்த கேப்பில் ஸ்பெயின் மற்றும் பார்சிலோனாவில் இரண்டாவது ஹனிமூனை கொண்டாட சென்றுள்ளது.

விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
இதுகுறித்து சமீபத்தில் விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும், பனியன் டாப்பில் நயன்தாரா தாலி தெரிய எடுத்த புகைப்படங்கள் என பதிவிட்டு இணையத்தை அலறவிட்டார் விக்னேஷ் சிவன். முன்னதாக எடுக்கப்பட்ட இவர்களது திருமண காட்சிகள் விரைவில் நெட்பிளிக்சில் டாக்குமெண்ட்ரியாக வெளியாக உள்ளது.

கணவனுக்காக ஷாப்பிங்
இந்நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் தன்னுடைய கணவனுக்காக விதவிதமான ட்ரெஸ்களை நயன்தாரா பர்சேஸ் செய்துள்ளார். இதன் புகைப்படங்களும் தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் அவர் விக்னேஷிற்காக தேடி தேடி டி ஷர்ட்களை பர்ச்சேஸ் செய்கிறார்.

சிறப்பான ஜோடி
நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக தமிழ் ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். இதனிடையே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி மிகச்சிறந்த பாராட்டுக்களை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. விக்னேஷ் சிவனும் ஒரு ஹீரோவைப் போலவே காணப்படுவதால் நயன்தாராவிற்கு சிறப்பான ஜோடியாக அவர் காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











