ஆயுத பூஜை ஸ்பெஷல்... நய்யாண்டி Vs வணக்கம் சென்னை!
சென்னை: இந்த வாரம் ஆயுத பூஜை, விஜயதசமி (நவராத்திரி) என சைவ வாரம். கோடம்பாக்கத்திலும் அதன் எதிரொலியாக இரண்டு சைவப் படங்கள் வெளியாகின்றன.
ஒன்று கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள வணக்கம் சென்னை. அடுத்தது சற்குணம் இயக்கத்தில் வெளியாகியுள்ள நய்யாண்டி. இரண்டுமே காமெடியை மட்டும் நம்பி களமிறங்குகின்றன.

நய்யாண்டி
தனுஷ் நடித்துள்ள நய்யாண்டி படம் கடந்த சில தினங்களாக அப்படத்தின் ஹீரோயின் சொன்ன பொய்களால் பரபரப்பு விளம்பரம் தேடிக் கொண்டது. தமிழகத்தின் நல்ல திரையரங்குகளாகப் பார்த்து இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். இன்றைய துவக்க காட்சிகளுக்கு நல்ல கூட்டம்.

தனுஷ்
தனுஷுக்கு இது முக்கியமான படம். தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார் தமிழில் அவர். மயக்கம் என்ன சுமாராகத்தான் போனது. அடுத்து வந்த 3 படுதோல்வியைத் தழுவியது. அடுத்து வந்த மரியானும் அவுட். அதற்குப் பிறகுதான் இந்தியில் ராஞ்சனா வெளியானது. இந்தியில் அந்தப் படம் ஹிட் ஆனாலும், தமிழில் தோல்வியைத் தழுவியது.

வெற்றி முக்கியம்
எனவே நய்யாண்டி ஜெயிப்பது தனுஷுக்கு முக்கியம். தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டு வரும் நேரத்தில், இந்தப் படத்துக்கு எதிர்மறை ரிசல்ட் வந்தால், இமேஜ் காலியாகிவிடும்.

வணக்கம் சென்னை
வணக்கம் சென்னை படத்தை இயக்கியிருப்பவர் கிருத்திகா. தயாரித்திருப்பவர் அவர் கணவர் உதயநிதி ஸ்டாலின். சிவா - ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே இளைஞர்கள் மத்தியில் ஹிட்.
இந்த இரு படங்களைத் தவிர கயவன் என்ற புதுமுகங்கள் நடித்த படமும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











