»   »  குஷ்புவை இத்துடன் விட்டுவிடலாம்: நாசர்திருவண்ணாமலை:நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டு விட்டதால் அவரை இத்துடன் விட்டு விடுவோம் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த நாசர்செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் பேசியது குறித்து கண்ணீருடன் குஷ்பு மன்னிப்பு கேட்டு விட்டார். எனவே அவரதுவிவகாரத்தை அத்துடன் விட்டு விடலாம். மேலும் மேலும் அதைக் கிளற வேண்டாம்.தமிழகத்தில் தற்போது அத்தனை நிகழ்ச்சிகளுமே அரசியலாக்கப்படுகிறது. மக்களை திசை திருப்பும் முயற்சியே இது. கலை,இலக்கியம் ஆகியவற்றை விட்டு நாம் ரொம்பத் தூரம் போய் விட்டோம். அந்த இரண்டுமே இப்போது அரசியல்வாதிகள் கையில்சிக்கிக் கொண்டுள்ளன.ஏரி, குளங்களை மூடி விட்டோம். அதில் வீடுகளைக் கட்டி விட்டோம். பிறகு காவிரி நீரை மட்டும் கேட்டு சண்டை போடுவதில்என்ன நியாயம் உள்ளது? ஏரி, குளங்களைக் காக்க நிாம் என்ன செய்தோம்?நாட்டில் எத்தனையோ தீர்க்க முடியாத, தீர்வு காணப்படாத பிரச்சினைகள் உள்ளன. பாப்பாபட்டி, கீரிப்பட்டி விவகாரத்தில் நமதுஅரசியல்வாதிகள் என்ன தீர்வு கண்டார்கள்? எந்த முயற்சியாவது எடுத்தார்களா?ஆனால் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பெரிதாக்கி அதில் அரசியல் செய்து வருகிறார்கள். இது மிகவும் வேதனையாகஉள்ளது என்றார்.நாசருக்கு என்ன எதிர்ப்பு கிளம்பப் போகுதோ... பொறுத்திருந்து பார்போம்.

குஷ்புவை இத்துடன் விட்டுவிடலாம்: நாசர்திருவண்ணாமலை:நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டு விட்டதால் அவரை இத்துடன் விட்டு விடுவோம் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த நாசர்செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் பேசியது குறித்து கண்ணீருடன் குஷ்பு மன்னிப்பு கேட்டு விட்டார். எனவே அவரதுவிவகாரத்தை அத்துடன் விட்டு விடலாம். மேலும் மேலும் அதைக் கிளற வேண்டாம்.தமிழகத்தில் தற்போது அத்தனை நிகழ்ச்சிகளுமே அரசியலாக்கப்படுகிறது. மக்களை திசை திருப்பும் முயற்சியே இது. கலை,இலக்கியம் ஆகியவற்றை விட்டு நாம் ரொம்பத் தூரம் போய் விட்டோம். அந்த இரண்டுமே இப்போது அரசியல்வாதிகள் கையில்சிக்கிக் கொண்டுள்ளன.ஏரி, குளங்களை மூடி விட்டோம். அதில் வீடுகளைக் கட்டி விட்டோம். பிறகு காவிரி நீரை மட்டும் கேட்டு சண்டை போடுவதில்என்ன நியாயம் உள்ளது? ஏரி, குளங்களைக் காக்க நிாம் என்ன செய்தோம்?நாட்டில் எத்தனையோ தீர்க்க முடியாத, தீர்வு காணப்படாத பிரச்சினைகள் உள்ளன. பாப்பாபட்டி, கீரிப்பட்டி விவகாரத்தில் நமதுஅரசியல்வாதிகள் என்ன தீர்வு கண்டார்கள்? எந்த முயற்சியாவது எடுத்தார்களா?ஆனால் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பெரிதாக்கி அதில் அரசியல் செய்து வருகிறார்கள். இது மிகவும் வேதனையாகஉள்ளது என்றார்.நாசருக்கு என்ன எதிர்ப்பு கிளம்பப் போகுதோ... பொறுத்திருந்து பார்போம்.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டு விட்டதால் அவரை இத்துடன் விட்டு விடுவோம் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த நாசர்செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் பேசியது குறித்து கண்ணீருடன் குஷ்பு மன்னிப்பு கேட்டு விட்டார். எனவே அவரதுவிவகாரத்தை அத்துடன் விட்டு விடலாம். மேலும் மேலும் அதைக் கிளற வேண்டாம்.

தமிழகத்தில் தற்போது அத்தனை நிகழ்ச்சிகளுமே அரசியலாக்கப்படுகிறது. மக்களை திசை திருப்பும் முயற்சியே இது. கலை,இலக்கியம் ஆகியவற்றை விட்டு நாம் ரொம்பத் தூரம் போய் விட்டோம். அந்த இரண்டுமே இப்போது அரசியல்வாதிகள் கையில்சிக்கிக் கொண்டுள்ளன.

ஏரி, குளங்களை மூடி விட்டோம். அதில் வீடுகளைக் கட்டி விட்டோம். பிறகு காவிரி நீரை மட்டும் கேட்டு சண்டை போடுவதில்என்ன நியாயம் உள்ளது? ஏரி, குளங்களைக் காக்க நிாம் என்ன செய்தோம்?

நாட்டில் எத்தனையோ தீர்க்க முடியாத, தீர்வு காணப்படாத பிரச்சினைகள் உள்ளன. பாப்பாபட்டி, கீரிப்பட்டி விவகாரத்தில் நமதுஅரசியல்வாதிகள் என்ன தீர்வு கண்டார்கள்? எந்த முயற்சியாவது எடுத்தார்களா?

ஆனால் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பெரிதாக்கி அதில் அரசியல் செய்து வருகிறார்கள். இது மிகவும் வேதனையாகஉள்ளது என்றார்.

நாசருக்கு என்ன எதிர்ப்பு கிளம்பப் போகுதோ... பொறுத்திருந்து பார்போம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil