'அஜித்துக்கு ஜோடியா.. அவர்கள் சொல்லும் வரை பொறுத்திருங்கள்'.. வலிமை பற்றி நஸ்ரியா டிவீட்!

வலிமை படத்தில் தான் நடிப்பதாக வதந்தி பரப்ப வேண்டாம் என நடிகை நஸ்ரியா நசிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended Video

Ajith's Valimai Movie cast : வலிமை பற்றி நஸ்ரியா டிவீட்-வீடியோ

சென்னை: வலிமை படத்தில் தான் நடிப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி தான் என நடிகை நஸ்ரியா நசிம் தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின. இதனால் அவரது அடுத்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் வலிமை, முந்தைய படத்தை இயக்கிய எச்.வினோத் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

அஜித்தின் வலிமை

அஜித்தின் வலிமை

வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் பூஜையுடன் தொடங்கியது. அஜித் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன.

அஜித் ஜோடி நஸ்ரியா

அஜித் ஜோடி நஸ்ரியா

இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நஸ்ரியா நசிம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை நஸ்ரியா மறுத்துள்ளார்.

 நஸ்ரியா மறுப்பு

நஸ்ரியா மறுப்பு

இதுகுறித்து டிவீட் செய்துள்ள நஸ்ரியா, "வலிமை படத்தில் தான் நடிப்பதாக வெளியான தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அது வெறும் வதந்தி மட்டுமே. எனவே அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருங்கள். தவறான செய்திகளை நம்ப வேண்டாம்", என கேட்டுக்கொண்டுள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

வலிமை படத்தில் நஸ்ரியா நடிக்கப் போவதாக வெளியான தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் தற்போது நஸ்ரியாவின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

சந்தேகம் சரிதானே

சந்தேகம் சரிதானே

இருப்பினும் வலிமை படத்தில் நடிக்கும் செய்தியை நஸ்ரியா ஏன் முழுமையாக மறுக்கவில்லை என்றும் ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. அது விரைவில் தெரியவரும் என தல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பகத் பாசில்

பகத் பாசில்

தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்ஹா உள்ளிட்ட சில படங்களில் நஸ்ரியா நடித்துள்ளார். மலையாள படங்களில் அதிகம் நடித்து வந்த நஸ்ரியா, நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசியாகிவிட்டார். அதன் பிறகு அவர் அவ்வளவாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

மீண்டும் நடிக்கிறார்

தற்போது பகத் பாசிலுடன் ஒரு மலையாள படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் வலிமை படத்தில் மூலம் நஸ்ரியா தமிழில் ரீஎண்ட்ரி ஆகிறார் எனும் தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என தெரியவந்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X