புது போர்ஷே காரில் பெங்களூர் விசிட்.. அம்மாவான மேக்னா ராஜை நேரில் வாழ்த்திய நட்சத்திர ஜோடி!

By

பெங்களூரு: நடிகை மேக்னாராஜையும் அவர் குழந்தையையும் நேரில் சந்தித்து நஸ்ரியாவும் பகத் பாசிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகை மேக்னா ராஜுக்கு கடந்த 22 ஆம் தேதி, அழகான ஆண் குழந்தைப் பிறந்தது.

நடிகை மேக்னா, மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

பிரமிளாவின் மகள்

பிரமிளாவின் மகள்

தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகர் சுந்தர்ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள். இவர் கன்னட நடிகரும் நடிகர் அர்ஜுனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நான்கு மாத கர்ப்பிணி

நான்கு மாத கர்ப்பிணி

கடந்த சில மாதங்களுக்கு முன், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சிரஞ்சீவி சார்ஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பயங்கர சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

எதிர்பார்த்தது போலவே

எதிர்பார்த்தது போலவே

அவர் மறைவை அடுத்து மேக்னா வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார். அவர் நினைத்ததுபோல சில நாட்களுக்கு முன், மேக்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேக்னா எதிர்பார்த்தது போலவே, சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறினர்.

நேரில் வாழ்த்து

நேரில் வாழ்த்து

இந்நிலையில், மருத்துவமனையில் இருக்கும் நடிகை மேக்னா ராஜையும் அவர் குழந்தையையும் நேரில் சந்தித்து, நடிகை நஸ்ரியாவும் அவர் கணவர் நடிகர் பகத் பாசிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் சமீபத்தில் வாங்கி இருந்த, சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ‘போர்ஷே 911' மாடல் காரில் பெங்களூர் சென்றனர்.

அவர்கள் மரியாதை

அவர்கள் மரியாதை

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பின்னர், சிரஞ்சீவிசார்ஜா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று அவர்கள் மரியாதை செலுத்தினர். மருத்துவமனை வளாகத்தில் இருவரும் காரில் இருந்து இறங்கிச் செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

நெருங்கிய தோழிகள்

நெருங்கிய தோழிகள்

நடிகை மேக்னா ராஜ் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அவரும் நடிகை நஸ்ரியாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பகத் பாசில் சமீபத்தில் விலை உயர்ந்த போர்ச்சே காரை வாங்கியிருந்தார். அந்தப் பச்சை நிற காரில் அவர்கள் பெங்களூருக்கு சென்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X