நாளை நஸ்ரியா- பஹத் பாஸில் திருமண நிச்சயதார்த்தம்!

By Shankar

நஸ்ரியா - பகத் ஃபாஸில் திருமணம் நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளவர் நஸ்ரியா நஸீம். தமிழில் 'நேரம்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நஸ்ரியா.

திருமணம் எனும் நிக்காஹ்

திருமணம் எனும் நிக்காஹ்

ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் அவரது கடைசி படமாக ஜெய் ஜோடியாக நடித்த திருமணம் எனும் நிக்காஹ் வெளியானது.

பகத் ஃபாஸில்

பகத் ஃபாஸில்

நஸ்ரியாவுக்கும் மலையாள நடிகர் பகத் ஃபாஸிலுக்கும் திருமணம் நிச்சயமானது. பஹத் பாசில் பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகன். மலையாளத்தில் முன்னணி நடிகரும் கூட.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

நஸ்ரியா - பகத் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்தது. அதன் பிறகு, நான் நடிக்க வேண்டிய படங்களை வேகமாக முடித்துக் கொடுத்துவிட்டார் நஸ்ரியா.

நாளை திருமணம்

நாளை திருமணம்

நஸ்ரியா-பகத் ஃபாஸில் திருமணம் நாளை (21-ந்தேதி) திருவனந்தபுரத்தில் நடக்கிறது. திருமணத்துக்கு தமிழ், மலையாள நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.

வரவேற்பு

வரவேற்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சி 24-ந்தேதி கொச்சியில் நடக்கிறது. திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. நேற்று நடந்த நஸ்ரியாவுக்கு மெகந்தியிடும் நிகழ்ச்சியில், அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

நடிக்க மாட்டார்

நடிக்க மாட்டார்

திருமணத்துக்கு பிறகு நஸ்ரியா நடிக்க மாட்டார் என ஃபாஸில் வீட்டார் ஏற்கெனவே அறிவித்தது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X