"நஸ்ரியா - பகத் இனிமேல்தான் நிச்சயதார்த்தம் - ஆனா இடம்... உங்களுக்குச் சொல்லமாட்டோம்' -

By Shankar

நஸ்ரியா - பகத் நிச்சயதார்த்தம் இனிமேல்தான் நடக்கப் போவதாகவும், ஆனால் அறிவித்தபடி ஆகஸ்டில் திருமணம் என்றும் நடிகர் பகத் பாசில் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் படப்பிடிப்பில் காதல் ஏற்பட்டது. இந்தக் காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இனிமேல்தான்

இனிமேல்தான்

முதலில் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாக பகத் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது, இனிமேல்தான் நடக்கப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நஸ்ரியா வீட்டில்

நஸ்ரியா வீட்டில்

நஸ்ரியாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. எனவே அங்கேயே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த பாசில் மற்றும் நஸ்ரியாவின் அப்பா முடிவு செய்துள்ளனர்.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

இந்த ஏற்பாடுகள் குறித்து நஸ்ரியாவின் தந்தை கூறுகையில், "நஸ்ரியா-பகத் பாசிலின் திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்த மாதம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இடத்தை சொல்ல மாட்டோம்

இடத்தை சொல்ல மாட்டோம்

இது முழுக்க குடும்ப நிகழ்ச்சி. நஸ்ரியா, பகத் பாசிலின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்கின்றனர். நிச்சயதார்த்தம் நடக்கும் இடம் தேதியை வெளிப்படையாக சொல்ல இயலாது. அது ரகசியமாக நடக்கும்.

ஆகஸ்டில்

ஆகஸ்டில்

ஆனால் அறிவித்தபடி திருமணம் ஆகஸ்டில் நடக்கும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்," என்றார்.

‘திருமணம் எனும் நிக்கா', ‘வாயை மூடி பேசவும்', ‘நீ நல்லா வருவடா' உள்பட 7 படங்களில் நடித்து வருகிறார் நஸ்ரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X