நஸ்ரியா ஒரு மேஜிக்: அப்பா பாசிலிடம் கூறிய பஹத்

By Siva

திருவனந்தபுரம்: நஸ்ரியா ஒரு மேஜிக்(அற்புதம்) என்று தனது மகன் பஹத் கூறியதாக இயக்குனர் பாசில் தெரிவித்துள்ளார்.

நேரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நஸ்ரியா நஸீம் மலையாள இயக்குனர் பாசிலின் மகனும், முன்னணி மலையாள ஹீரோவுமான பஹதை வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்கிறார்.

இது குறித்து இயக்குனர் பாசில் கூறியிருப்பதாவது,

நஸ்ரியா

நஸ்ரியா

நஸ்ரியாவும், பஹதும் திருமணம் செய்வது போல் ஒன்றரை மாதத்திற்கு முன்பு எனக்கு கனவு வந்தது. நஸ்ரியா ஒரு குடும்பப்பாங்கான பெண். அவரை எனக்கு குழந்தையில் இருந்தே தெரியும்.

பெற்றோர்

பெற்றோர்

நஸ்ரியாவின் பெற்றோரை அணுகி அவர்களின் மகளை எனது மகன் பஹதுக்கு திருமணம் செய்து தர சம்மதமா என்று கேட்டேன். அவர்களுக்கு சம்மதம் தான். ஆனால் பஹத், நஸ்ரியாவுக்கு இது சம்மதமா என்று தெரியவில்லையே என்றனர்.

பஹத்

பஹத்

நாங்கள் பெரியவர்கள் பேசி முடிவு செய்த பிறகு பஹதிடம் பேசினோம். நான் பஹத் மற்றும் நஸ்ரியாவிடம் பேசி உங்களுக்கு பிடித்தால் மட்டும் சம்மதியுங்கள் என்று தெரிவித்தேன்.

மேஜிக்

மேஜிக்

நஸ்ரியா குடும்பப்பாங்கான பெண் என்று பஹதும் நினைத்தார். நஸ்ரியா ஒரு மேஜிக் என்று என்னிடம் பஹத் கூறினார். நஸ்ரியாவுக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் என்று தெரிந்தது. இதையடுத்து நாங்கள் மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்வது குறித்து பேசினோம்.

மீடியா

மீடியா

நாங்கள் சொல்வதற்கு முன்பு இந்த செய்தி மீடியாவுக்கு கிடைத்தால் அது நன்றாக இருக்காது என்று நினைத்தேன். அதனால் தான் திருமணம் குறித்த அறிவிப்பை நானே வெளியிட்டேன். நஸ்ரியா மற்றும் பஹதை மீடியா கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்குமாறு கூறியுள்ளேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார் பாசில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X