கணவருடன் நெருக்கமாக செல்ஃபி... பெஸ்ட் ஃபிரண்டை அறிமுகப்படுத்திய நடிகை நஸ்ரியா!

கொச்சி : மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை நஸ்ரியா இப்போது தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த கேப்பில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி மலையாள படங்களை தொடர்ந்து தயாரித்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

இப்பொழுது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள நஸ்ரியா அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வர இப்பொழுது பகத் பாசிலுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நண்பர்கள் தின வாழ்த்துக்களை கூறியுள்ள க்யூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் ராணியாக

ரசிகர்களின் ராணியாக

தமிழ் சினிமாவில் சிறிது காலம் தான் நடித்தாலும் ரசிகர்களின் ராணியாக கொண்டாட பட்டவர் நடிகை நஸ்ரியா . மலையாளத்தில் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழில் நேரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.நேரம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர வெளியாகி மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வசூலை அள்ளிய திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று.

நீண்ட காலமாக காதலித்து

நீண்ட காலமாக காதலித்து

நேரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் நஸ்ரியாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வர ராஜாராணி, வாயை மூடி பேசவும்,நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் கம்பக் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் மாறி மலையாளத்தில் வரதன், கும்பலங்கி நைட்ஸ், சி யு சூன் உள்ளிட்ட படங்களை தயாரித்து தயாரிப்பாளராக மாறினார். மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமே இதுவரை பரிச்சயமாக இருந்தவர் இப்பொழுது தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். நடிகர் நானியின் நடிப்பில் விவேக் அத்ரியா இயக்கத்தில் அன்டே சுந்தரானிக்கி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டுள்ளது.

வில்லனாக

வில்லனாக

இதற்கிடையில் நடிகர் பகத் பாசிலும் தமிழில் அறிமுகமாகி வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் என தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவையும் கலக்கிக் கொண்டுள்ளார். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் அடுத்தடுத்து முனைப்புடன் நடித்து வரும் பகத் பாசில் மிக விரைவிலேயே தனக்கென தனி இடத்தை பிடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பெஸ்ட் ஃபிரண்ட்

பெஸ்ட் ஃபிரண்ட்

என்ன தான் திருமணம் ஆகியிருந்தாலும் நஸ்ரியா பகத் பாசில் இன்னும் நண்பர்களைப் போலவே பழகி வர நேற்று நண்பர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதையொட்டி கணவர் பகத் பாசிலுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நடிகை நஸ்ரியா சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு பகத் பாசில் தான் என்னுடைய "பெஸ்ட் ஃபிரண்ட்" என அறிமுகப் படுத்தியதோடு நண்பர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த க்யூட் கப்புளின் ஃபிரண்ட்ஷிப் டே புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X