செம க்யூட்.. நஸ்ரியாவின் டான்ஸை பார்த்து குஷியாகும் நெட்டிசன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
சென்னை: நஸ்ரியாவின் க்யூட் டான்ஸ் வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
மலையாள தொலைக்காட்சி சேனலில் ஆங்கராக பணியாற்றியவர் நஸ்ரியா நஸீம். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் நஸ்ரியா.
மாட் டாட் என்ற மலையாள படத்தில் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமானார் நஸ்ரியா. தொடர்நது தமிழில் நேரம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

நடிகருடன் திருமணம்
இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜா ராணி, நய்யாணி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

சமூக வலைதளங்களில்..
தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்த நஸ்ரியா, தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவுக்கும் அறிமுகமாகிறார் நஸ்ரியா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள நஸ்ரியா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

க்யூட் டான்ஸ்..
இந்நிலையில் இந்தி பாடல் ஒன்றுக்கு தனது தோழியுடன் செம க்யூட்டாக டான்ஸ் ஆடியிருக்கிறார் நஸ்ரியா. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார் நஸ்ரியா. இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
புகழும் நெட்டிசன்ஸ்
பலரும் க்யூட், அமேஸிங், பியூட்டிஃபுல் என நஸ்ரியாவின் நடனத்தை புகழ்ந்து வருகின்றனர். நஸ்ரியாவின் இந்த நடன வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











