கிளாமர் கேட்பாங்களே.. முதன்முறையாக அந்த மொழியில் ஹீரோயினாக அறிமுகமாகும் நஸ்ரியா!
சென்னை: பிரபல நடிகை நஸ்ரியா, தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா, நேரம் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
தொடர்ந்து அட்லி இயக்கிய ராஜா ராணி, தனுஷின் நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உட்பட சில படங்களில் நடித்தார்.

கடைசியாக டிரான்ஸ்
இவர், பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, வரதன், கும்ப்ளாங்கி நைட்ஸ் உட்பட சில படங்களை தயாரித்தார். கடைசியாக அவர் டிரான்ஸ் என்ற படத்தில் பகத் பாசிலுடன் நடித்திருந்தார்.

தெலுங்கு அறிமுகம்
இதையடுத்து இப்போது, அவர் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தெலுங்கில் அவர் நடிப்பது இதுதான் முதன்முறையாகும். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் 'ட்ரான்ஸ்' படத்தில் மட்டுமே நடிகை நஸ்ரியா நடித்திருந்தார். அதற்கு பிறகு அவர் நடிக்கும் படம் இது. திருமணத்துக்குப் பிறகு மற்றொரு நாயகனுக்கு நாயகியாக நஸ்ரியா நடிக்கும் முதல் படமும் இதுதான்.

மென்டல் மதிலோ
இதில், நானி ஹீரோவாக நடிக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். விவேக், இதற்கு முன் மென்டல் மதிலோ, புரோச்சேவரேவருரா படங்களை இயக்கியவர். அவருடைய 2 வது படம், சூப்பர் ஹிட்டானது. அது சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அந்தப் படத்தை
அடுத்து இதை இயக்குகிறார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

கிளாமராக நடித்ததில்லை
இது நானியின் 28-வது படம். நவம்பர் 21 ஆம் தேதி இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் விவரமும் அப்போது அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. நஸ்ரியா, இதுவரை கிளாமராக நடித்ததில்லை. தெலுங்கில் கிளாமராக நடிக்க வேண்டி வருமே எனக் கேட்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











