நஸ்ரியா காதுல பூ .. செம க்யூட் போட்டோ.. தங்கமே என உருகும் ரசிகர்கள் !

திருவனந்தபுரம் : தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான நஸ்ரியா நாசிம் இப்பொழுது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Recommended Video

Video: Goli Soda Actor Chemban Second Marriage | Angamaley diaries

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான "ட்ரான்ஸ்" திரைப்படத்தில் இவரது வேற லெவல் பர்ஃபாமன்ஸ் பார்த்து ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போயுள்ளனர்.

இந்நிலையில் துல்கர் சல்மான் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான "மனியரயிலே அசோகன்" என்ற திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நஸ்ரியா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதில் பூ வைத்தவாறு க்யூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

தனது துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை நஸ்ரியா நசீம் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

நல்ல நேரம்

நல்ல நேரம்

2013ஆம் ஆண்டு வெளியான " மேட் டாட் " என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நஸ்ரியா பின், தமிழ் மற்றும் மலையாளம் என குழந்தை நட்சத்திரமாக ஒரு சேர உருவான "நேரம்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல நேரம் ஆரம்பிக்க அபார ரசிகர்களை பெற்று பிரபலமான நடிகை ஆனார்.

ரசிகர்கள் கூட்டம்

ரசிகர்கள் கூட்டம்

நேரம் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில் ராஜா ராணி, நைய்யாண்டி, வாயை மூடி பேசவும் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரர் ஆனார்.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா, பகத் பாசில் என மல்டி ஸ்டார் திரைப்படமாக இளமை துள்ளலுடன் உருவான "பெங்களூர் டேஸ்" மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட பல மொழி ரசிகர்களையும் கவர்ந்ததோடு இந்த திரைப்படம் தமிழில் "பெங்களூரு நாட்கள்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

மிகப்பெரிய ட்ரான்ஸ்பர்மேஷன்

மிகப்பெரிய ட்ரான்ஸ்பர்மேஷன்

திருமணத்திற்கு பின் பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நஸ்ரியா இந்த ஆண்டு வெளியான "ட்ரான்ஸ்" திரைப்படத்தின் மூலம் நடிப்பில் மிகப்பெரிய ட்ரான்ஸ்பர்மேஷன் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.

கையில் சிகரெட் மது

கையில் சிகரெட் மது

இதுவரை க்யூட்டான பெண்ணாக மட்டுமே திரைப்படங்களில் நஸ்ரியாவை பார்த்து வந்த ரசிகர்களுக்கு ட்ரான்ஸ் திரைப்படத்தில் பாப் கட்டிங், ஷார்ட் டிரஸ், கையில் சிகரெட் மாது என நஸ்ரியாவை மாறுபட்ட கோணத்தில் பார்த்து பலரும் அதிர்ந்து போயினர்.

செம க்யூட்டாக

செம க்யூட்டாக

இவ்வாறு திரைப்படங்களில் மீண்டும் கம்பாக் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்து வரும் நஸ்ரியா, இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "காதில் பூ" வைத்தவாறு செம க்யூட்டாக இருக்கும் த்ரூ பேக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களின் அன்பையும் லைக்குகளையும் பெற்று வரும் நிலையில், பலர் தங்கமே என நஸ்ரியாவை பாராட்டி செல்லமாக அழைத்து வருகின்றனர். இருப்பினும் காதில் பூ வைத்த அந்த நபர் யாருனு தெரியலயே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X