»   »  வைரல் வீடியோ: கொனட்டி கொனட்டி பாடும் இந்த சிறுமி எந்த நடிகை என்று தெரியுதா?

வைரல் வீடியோ: கொனட்டி கொனட்டி பாடும் இந்த சிறுமி எந்த நடிகை என்று தெரியுதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நஸ்ரியா நஸீம் சிறுமியாக இருந்தபோது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கொனட்டி கொனட்டி பாட்டு பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

நஸ்ரியா நஸீம் நடிக்க வந்த வேகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பொண்ணு பார்க்க மட்டும் அல்ல நல்லாவும் நடிக்குது என்று கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் பெயர் வாங்கினார்.

தனுஷுடன் சேர்ந்து நையாண்டி படத்தில் நடித்து தொப்புள் பிரச்சனையை பெரிதாக்கி சர்ச்சையில் சிக்கினார். படத்தின் விளம்பரத்திற்காக அந்த பிரச்சனையை கிளப்ப சொன்னது யார் என்பது கூட பின்னர் தெரிய வந்தது.

திருமணம்

திருமணம்

நடிக்க வந்த வேகத்தில் வளர்ச்சிப் பாதையில் சென்ற நஸ்ரியா மலையாள நடிகர் பஹத் ஹாசிலை மணந்து கேரளாவில் செட்டிலாகிவிட்டார். நடிக்க வருவார் வருவார் என்று கூறுகிறார்கள். ஆனால் இன்னும் நடக்கவில்லை.

வீடியோ

நஸ்ரியா சிறுவயதில் துபாயில் இருந்தாராம். அப்பொழுது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் பாடிய சுலேகா பாடல் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

கொனட்டி

கொனட்டி

நஸ்ரியா சிறுவயதில் டிவி நிகழ்ச்சியில் பாடுகிறோம் என்ற பயமே இல்லாமல் அழகாக பாடுவதுடன், சைகையும் செய்வது பலருக்கு வியப்பை அளித்துள்ளது. நடிப்பு அவர் ரத்தத்திலேயே உள்ளதை இந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது.

வீடு

வீடு

நஸ்ரியா தொடர்ந்து நடிக்க பஹத் பாசில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் நஸ்ரியா நடிக்க வராமல் வீட்டில் இருந்து நல்ல மனைவியாக கணவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

English summary
Childhood video of actress Nazriya Nazim has gone viral on internet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos