இப்படியே பண்றாங்களே.. மர்மநபர்கள் கைவரிசை.. நடிகை நஸ்ரியா இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்!
கொச்சி: பிரபல நடிகை நஸ்ரியா நாஸிமின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா நாஸிம்.
இவர், நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து வாய்ப்புகள் அதிகரித்தன.

வாயை மூடி பேசவும்
அட்லி இயக்கிய ராஜா ராணி, தனுஷின் நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்பட சில படங்களில் நடித்தார். இவர், பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு அதிகப் படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, வரதன், கும்ப்ளாங்கி நைட்ஸ் உள்பட சில படங்களை தயாரித்தார்.

தெலுங்கு அறிமுகம்
கடைசியாக அவர் டிரான்ஸ் என்ற படத்தில், பகத் பாசிலுடன் நடித்திருந்தார். இதையடுத்து அவர் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தெலுங்கில் அவர் நடிப்பது இதுதான் முதன்முறை. திருமணத்துக்குப் பிறகு ஹீரோயினாக நஸ்ரியா நடிக்கும் முதல் படமும் இதுதான்.

இன்ஸ்டாகிராம்
இதில், நானி ஹீரோவாக நடிக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் நேற்றிரவு செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை நஸ்ரியா உறுதிப்படுத்தி உள்ளார். அதில், என்னுடைய இன்ஸ்டா கணக்கை சில ஜோக்கர்கள் முடக்கி உள்ளனர்.

பதில் வேண்டாம்
சில நாட்களுக்கு என் கணக்கில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக, பிரபலங்களின் சோசியல் மீடியா கணக்குகளை குறிவைத்து சிலர் முடக்கி வருகின்றனர். சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் சோசியல் மீடியா கணக்கை சிலர் முடக்கினர். பின்னர் அது மீட்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











