அட நம்ம ராஜாராணி நஸ்ரியாவா இது.. வைரலாகும் ’டிரான்ஸ்’ போஸ்டர்!
மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள டிரான்ஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் நடிகை நஸ்ரியா ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
கேரளா: பிரபல மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கியுள்ள படம் டிரான்ஸ்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள படமான கூடேவில் நடித்திருந்த நஸ்ரியா, தற்போது டிரான்ஸ் படத்தில் கணவர் ஃபகத் ஃபாசிலுடன் நடித்துள்ளார்.
தற்போது வெளி

பெரிய பட்ஜெட்
மலையாள மொழி படங்கள் பெரும்பாலும் சில கோடிகளிலே எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அன்வர் ரஷீத் இயக்கத்தில் உருவாகியுள்ள டிரான்ஸ் படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கேரளா, துபாய் மற்றும் ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட இடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

வதந்தி
எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் படத்திற்கு வலிமை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வலிமை குறித்து நஸ்ரியா போட்ட ட்வீட்டை தொடர்ந்து, வலிமையில் நஸ்ரியா நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது. ஆனால், அது வதந்தி என நஸ்ரியா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஹாலிவுட் படம்
ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை இயக்கிய இயக்குநர் டேனி பாயல் இயக்கத்தில் 2013ம் ஆண்டு டிரான்ஸ் எனும் தலைப்பில் ஒரு ஹாலிவுட் படம் வெளியானது. அந்த படத்தின் ரீமேக்கா அல்லது இதுவேற ஒரு படமா என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. டிரான்ஸ் என்றால் மயக்க நிலை என்பது பொருள்.

நஸ்ரியா
தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை நஸ்ரியா. மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளதால், விரைவில் தமிழிலும் ஒரு சரியான கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆஸ்கர் நாயகன்
அன்வர் ரஷீத் இயக்கத்தில் உருவாகியுள்ள டிரான்ஸ் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இந்த படத்தில் ஃபகத் ஃபாசில் ஐந்து கால கட்டங்களில் எப்படி அவரது வாழ்க்கை நகர்கிறது என்பதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











