ரீ என்ட்ரினா இதுவல்லவா... வலிமை படத்தில் இணைந்த நஸ்ரியா?
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள வலிமை படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க நஸ்ரியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: நிவின் பாலியின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா.
அந்த படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தனுஷின் நைய்யாண்டி, துல்கர் சல்மானுடன் வாயை மூடி பேசவும் என பல தமிழ் படங்களில் க்யூட் நாயகியாக வலம் வந்தார்.
மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்ட பின்னர், சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகினார்.

தல ரசிகை
சில படங்களில் நடித்தாலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை நஸ்ரியா. நடிகை நஸ்ரியா அஜித்தின் தீவிர ரசிகை என்றும் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரம்
நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் முன்பே, மலையாளத்தில் 2006ம் ஆண்டு வெளியான பலுங்கு திரைப்படத்தில் கீதா என்ற குழந்தை நட்சத்திரம் ரோலில் நஸ்ரியா அறிமுகமானார்.

சினிமாவுக்கு குட்பை
நேரம், ராஜா ராணி என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த நஸ்ரியா, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் செட்டில் ஆனார். நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2018ல் மலையாளத்தில் வெளியான கூடே படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

வலிமையில் நடிக்கிறாரா?
அஜித்தின் 60வது படமான வலிமை படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. வலிமை டைட்டில் வெளியிட்ட சில மணி நேரங்களில், புதிய ஹேர்ஸ்டைலுடன் நடிகை நஸ்ரியா வலிமை என்ற ஹேஷ்டேகுடன் போட்ட ட்வீட் தான் இதற்கு காரணம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











