நஸ்ரியா வீட்டில் இருந்து நடிக்க வரும் செல்லக்குட்டி
திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா நஸீமின் தம்பி நடிகராகியுள்ளார்.
மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா நஸீம் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தனது கணவர் நடிக்கும் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

தம்பி
நஸ்ரியாவின் தம்பி நவீன் நஸீம் நடிகராகியுள்ளார். டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான குப்பி மலையாள படத்தை இயக்கிய ஜான்பால் ஜார்ஜின் அம்பிளி படத்தில் நடிக்கிறார் நவீன்.

படிப்பு
ஆர்கிடெக்சர் படிப்பை முடித்துள்ள நவீன் தற்போது பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருக்கிறார். அம்பிளி படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் துவங்க உள்ளது.

தாடி
கதையை கேட்டதுமே பிடித்துவிட்டது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். பட கதாபாத்திரம் போலவே எனக்கும் பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். படத்திற்காக தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நவீன் தெரிவித்துள்ளார்.

சவ்பின்
அம்பிளி படத்தின் ஹீரோ சவ்பின் ஷாஹிர் மூலம் தான் இயக்குனர் என்னை அணுகினார். எனக்கு சவ்பின் அண்ணாவை பல ஆண்டுகளாக தெரியும். படத்தில் நடிப்பது நான் எடுத்த முடிவு. என் முடிவை குடும்பத்தாரிடம் கூறியபோது அவர்கள் ஆதரவு அளித்தனர் என்றார் நவீன். நஸ்ரியாவை விட ஒரு வயது சிறியவர் நவீன். இருவருமே பிறந்த தேதி டிசம்பர் 20 ஆகும்.


Click it and Unblock the Notifications











