காதலர் தினத்தில் கணவருடன் ஊர் சுற்றும் நஸ்ரியா.. வாழ்த்துக்கூறிய ரசிகர்கள் !

கொச்சி : நடிகை நஸ்ரியா காதலர் தினத்தன்று கணவர் பகத் பாசிலுடன் ஒரு ஜாலி ட்ரிப் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த நஸ்ரியா நசீம் இப்பொழுது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து ஆரம்பமே அதிரடியாக வித்தியாசமான கெட்டப்பில் வந்திருந்தார்.

நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் இறங்கி இருக்கும் நஸ்ரியா நசீம் - பகத் பாசில் காதலர் தினத்தில் செம ஜாலியாக ஊர் சுற்றியவாறு எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.

நேரம் படத்தின்

நேரம் படத்தின்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நஸ்ரியாவுக்கும் மலையாளத்தை விடவும் தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். மேட் டாட் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

க்யூட்டான நடிப்பு

க்யூட்டான நடிப்பு

குழந்தைத்தனமான குணம் க்யூட்டான நடிப்பு என ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்ந்த நஸ்ரியாவுக்கு இன்று வரை எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, நையாண்டி, வாயை மூடி பேசவும் என பல படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் ஃபகத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திரைப்படங்களை தயாரித்து

திரைப்படங்களை தயாரித்து

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்த இவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோடே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இப்பொழுது படங்களில் அடுத்தடுத்து கலக்கி வருகிறார். நடிப்பதில் மட்டும் அல்லாமல் திரைப்படங்களை தயாரித்து வரும் நஸ்ரியா மலையாளத்தில் சக்கை போடு போட்ட கும்பலங்கி நைட்ஸ் , சீ யூ சூன், வரதன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு

காதலர் தினத்தை முன்னிட்டு

மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து மலையாளத் திரைப்படங்களில் கலக்கி வரும் இவர் மீண்டும் தமிழில் நடிக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு கணவர் பகத் பாசிலுடன் செம ஜாலியாக காரில் ட்ரிப் செய்தவாறு எடுத்துக்கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இவருக்கு பலரும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X