போதைப் பொருள் வழக்கு.. பிரபல நடிகர் அர்ஜுன் ராம்பால் காதலியின் தம்பி கைது.. பரபரக்கும் திரையுலகம்!

By

மும்பை: போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் காதலியின் தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாலிவுட் பரபரப்பாகி இருக்கிறது.

சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், இந்த வழக்கில் நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது புகார் அளித்தார்.

சி.பி.ஐ. விசாரணை

சி.பி.ஐ. விசாரணை

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் புகார் கூறியிருந்தார். போலீசார் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது.

ரியா மீது வழக்கு

ரியா மீது வழக்கு

அப்போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பைகுலா சிறை

பைகுலா சிறை

நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி கைது செய்த போலீசார், பின்னர் ரியா சக்கரவர்த்தியையும் கைது செய்தனர். சுமார் ஒரு மாதமாக பைகுலா சிறையில் இருந்த ரியா, சில நாட்களுக்கு முன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

சம்மன் அனுப்பி

சம்மன் அனுப்பி

இதற்கிடையே இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸ்

அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸ்

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் பார்ட்னரான கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் (Gabriella Demetriades) தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வெள்ளிகிழமை கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணை

மேலும் விசாரணை

தென்னாப்பிரிக்க நாட்டின் குடியுரிமை பெற்றவரான அவர் வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X