போதைப் பொருள் வழக்கில் பிரபல தயாரிப்பாளர் மனைவி திடீர் கைது.. திரையுலகம் அதிர்ச்சி!
மும்பை: போதைப் பொருள் வழக்கில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
போதைப்பொருள் கும்பலுக்கும் பாலிவுட் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

வாக்குமூலம் பதிவு
இது தொடர்பாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

தீபிகா மேலாளர்
இந் நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி திடீரென தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாசின் மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 1.8 கிராம் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் சிக்கியதாக கூறப்பட்டது.

ஆஜராக வேண்டும்
இதனால் அவரை கடந்த மாதம் 28- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை அவர் ஆஜராக வேண்டும் என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தயாரிப்பாளர் மனைவி
இந்நிலையில், போதை பொருள் வழக்கில் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா மனைவி ஷபானா சயீத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கிராம் மாரிஜுவானா கைப்பற்றப்பட்டது.

மனைவி கைது
இந்நிலையில், பிரோஸ் நதியத்வாலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர் இந்தியில் பிர் ஹேரா பெரி, அவாரா பாகல் தீவானா, வெல்கம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். தயாரிப்பாளர் ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்டு இருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











