போதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை.. பரபரப்பு!

மும்பை: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான விசாரணையில் பாலிவுட் சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருப்பது தெரிய வந்தது.

மறைந்த நடிகர் சுஷாந்தின் பண்ணை வீட்டில் அடிக்கடி போதை விருந்து நடைபெறும் என்றும் அண்மையில் தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி பாலிவுட்டில் போதை மருந்து இன்றி பார்ட்டியே நடக்காது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நடிகையிடம் விசாரணை

நடிகையிடம் விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி உட்பட பல முன்னணி நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று விசாரணை தொடங்கியுள்ளனர்.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். சூர்யாவின் என்ஜிகே படத்திலும் நடித்துள்ளார். தற்போது சிவ கார்த்திகேயனின் அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

போதை பொருள் விவகாரம் தொடர்பாக தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என்று கூறி வந்த ரகுல் பிரீத் சிங், தனக்கு சம்மன் வந்துள்ளதாக நேற்று ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இன்று காலை நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை விசாரணை

நாளை விசாரணை

இதனிடையே தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் ஆகியோரிடம் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X