தீபிகா படுகோனே தான் அட்மினாம்.. போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் தொடர்பாக வெளியான பரபரப்பு தகவல்

மும்பை: பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் நடைபெற்ற போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் குழுவின் அட்மினே தீபிகா என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

நடிகை ரியா சக்கரவரத்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கோவா டு மும்பை

கோவா டு மும்பை

ஐபிஎல் போட்டிகளுக்கு சமீபத்தில் விளம்பரப் படம் நடித்துக் கொடுத்த நிலையில், அடுத்ததாக கணவர் ரன்வீர் சிங் உடன் இணைந்து கோவாவில் விளம்பர ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார் நடிகை தீபிகா படுகோனே. போதைப் பொருள் தடுப்புப் பிரிவான என்சிபி சம்மன் அனுப்பிய நிலையில், கோவாவில் இருந்து மும்பை வந்தார் தீபிகா படுகோனே.

நாளை ஆஜர்

நாளை ஆஜர்

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிக்கிய வாட்ஸ்அப் சாட்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு தொடர்பு இருப்பதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், என்சிபி அனுப்பிய சம்மனை ஏற்று நாளை விசாரணைக்கு தீபிகா ஆஜராக உள்ளார்.

விசாரணை

விசாரணை

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் இது தொடர்பான வழக்கில் இன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், நடிகைகள் சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூரிடமும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபிகா தான் அட்மினாம்

தீபிகா தான் அட்மினாம்

பாலிவுட் நடிகைகள் மற்றும் நடிகர்கள் இடம்பெற்றுள்ள போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ்அப் க்ரூப்புக்கு நடிகை தீபிகா படுகோனே தான் அட்மின் என்ற அதிர்ச்சியான தகவலை தற்போது என்சிபி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். நாளை தீபிகாவிடம் கடும் விசாரணை நடத்தப்படும் என்பது இதன் மூலமாக தெரிகிறது.

கரண் ஜோஹரின் போதை பார்ட்டி

கரண் ஜோஹரின் போதை பார்ட்டி

மேலும், கடந்த 2019ல் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்திய போதை விருந்து குறித்த ஆதாரங்களும் சிக்கி உள்ளதாகவும், அதில் பங்கேற்ற தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், மலைகா அரோரா, விக்கி கவுசல், ஷாகித் கபூர் உள்ளிட்டோரையும் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X