அதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மேலும் 2 நடிகைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விவகாரம் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலிவுட்டிலும் கன்னட சினிமா துறையிலும் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

தூக்குப் போட்டு
நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா சக்கரவர்த்தி மீது புகார் அளித்தார்.

ரியா சக்கரவர்த்தி
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நடிகை ரியா கைது
பின்னர், அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிராண்டா உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாரா அலி கான்
இந்நிலையில் நடிகை ரியா சக்கரவர்த்தி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சில நடிகர், நடிகைகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஷ்ரத்தா கபூர், தமிழில் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் நடித்திருந்தார். சாரா அலிகான், பிரபல நடிகர் சைஃப் அலிகானின் மகள்.

அட்ரங்கி ரே
அவர், தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் அட்ரங்கி ரே என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் போதைப் பொருள் தடுப்புப் படையினர் சம்மன் அனுப்ப உள்ளனர். இதை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதைத் தாண்டி நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஃபேஷன் டிஸைனர் சைமன் கம்பட்டா ஆகியோரிடமும் அடுத்த வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











