Don't Miss!
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியா
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சாய்னா நேவாலுக்கு ஆபாச கமெண்ட் போட்ட நடிகர் சித்தார்த்.. நோட்டீஸ் அனுப்பிய மகளிர் ஆணையம்
சென்னை: ட்விட்டரில் சர்ச்சை ட்வீட்களை பதிவிட்டு வரும் நடிகர் சித்தார்த் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிராக ஆபாச ட்வீட் போட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சின்மயி உள்ளிட்ட பிரபலங்கள் நடிகர் சித்தார்த்துக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சித்தார்த்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
குஷ்புவுக்கு கொரோனா... டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு வருமா ?

பாஜகவுக்கு எதிராக
பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளத்தில் எதிர் கருத்துக்களை நடிகர் சித்தார்த் வைத்து வருகிறார். சில சமயங்களில் அவரது கருத்துக்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி விடுவதும் சில சமயங்களில் சர்ச்சையை கிளப்புவதுமாக உள்ளது. இந்நிலையில், தற்போது சாய்னா நேவால் ட்விட்டர் பதிவுக்கு கீழ் அவர் போட்ட கமெண்ட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையென்றால்
கடந்த ஜனவரி 5ம் தேதி பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூருக்கு வந்த பிரதமர் மோடியை போராட்டக்காரர்கள் வழிமறித்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஃப்ளை ஓவரில் பிரதமரின் கான்வாயை போராட்டக்காரர்கள் வழிமறித்த நிலையில், உயிருடன் அனுப்பியதற்கு நன்றி என மோடி சொன்ன வார்த்தை நாட்டையே உலுக்கியது.

சாய்னா நேவால் ட்வீட்
இந்த விவகாரம் தொடர்பாக ஏகப்பட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஜனவரி 6ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என ட்வீட் போட்டு இருந்தார்.

ஆபாச ட்வீட் போட்ட சித்தார்த்
ஷட்டல் கார்க் விளையாட்டை குறிக்கும் விதமாக 'Subtle Cock' என ஆபாசமான வார்த்தைகளால் நடிகர் சித்தார்த் சாய்னா நேவலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெண் விளையாட்டு வீராங்கனையிடம் எப்படி இவ்வளவு ஆபாசமாக பேசலாம் சித்தார்த் என பலரும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

சின்மயி கண்டனம்
எதிர்மறை கருத்துக்கள் இருந்தால் அதை தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால், இப்படி வரம்புமீறிய ஆபாச கமெண்டுகளை தவிர்த்திருக்கலாம் சித்தார்த் என பாடகி சின்மயி சித்தார்த்தின் ட்வீட்டுக்கு எதிரான தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கண்டனம்
சிவசேனா கட்சியின் ராஜ்ய சபா எம்பி பிரியங்கா சதுர்வேதி நடிகர் சித்தார்த்தின் ஆபாச கமெண்ட்டை பார்த்து விட்டு "சாய்னா நேவால் நம்முடைய தேசத்திற்கு பெருமை சேர்த்தவர். இவ்வளவு கேவலமான ஆபாச கமெண்ட்டை நடிகர் சித்தார்த் போட்டது பெரிய தவறு என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

சித்தார்த் விளக்கம்
"COCK & BULL" இதில் இருந்து தான் குறிப்பிட்டு அந்த கமெண்ட்டை போட்டேன். ஆபாசமாக கமெண்ட் செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும் நடிகர் சித்தார்த் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

மகளிர் ஆணையம் நோட்டீஸ்
தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மா நடிகர் சித்தார்த்துக்கு பகிரங்கமாக கண்டம் தெரிவித்ததுடன் நோட்டீஸும் அனுப்பி உள்ளார். இன்னும் எப்படி சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது? என்கிற கேள்வியையும் எழுப்பி ட்விட்டர் இந்தியாவுக்கு இந்த விவகாரத்தை டேக் செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். மகாராஷ்ட்ரா போலீஸ் நடிகர் சித்தார்த் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.