Ne Zha 2 Box Office: அனிமேஷன் படத்துக்கு 8 ஆயிரம் கோடி வசூலா?.. நே ஜா 2வால் அதிரும் பாக்ஸ் ஆபீஸ்!

சீனா: உலக அளவில் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் பஞ்சம் இருந்தது கிடையாது. சினிமாவுக்கு தடை என சினிமாவில் இருந்து விலகி இருந்த நாடுகள் கூட, சினிமாவில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. இப்படி இருக்கும்போது, சீனாவில் ரிலீஸ் ஆன நே ஜா 2 படம் ரிலீஸ் ஆகி 12 நாளில் மட்டும் இந்திய மதிப்பில் ரூபாய் 8000 கோடிகளை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் குறித்தும் படத்தின் வசூல் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆன அனிமேஷன் படம், நே ஜா 2. இந்தப் படம் 16ஆம் நூற்றாண்டில், வெளியான சீன நாவலான இன்வெஸ்டிச்சர் ஆஃப் தி காட்ஸ் என்ற நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜியாஸ் திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டது போல் படம் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வெளியானது. அதாவது அன்றைய தினத்தில் சீனப் புத்தாண்டு. சீனப் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன நே ஜா 2, பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 8000 கோடிகள் வசூல் குவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூல் குவித்த படமாக இந்தப் படம் மாறியுள்ளது. மேலும் ஆங்கிலம் இல்லாத படங்களில் அதிக வசூல் குவித்த படமாகவும் இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.

Ne Zha 2 Ne Zha2 Box Office Box Office Record

இந்த 8000 கோடிகளை நே ஜா 2 படம் சீனாவில் மட்டும் வசூல் செய்துள்ளது. சீனாவில் மட்டும் ரூபாய் 8000 கோடிகளை பாக்ஸ் ஆபீஸில் அள்ளிய படம் என்றால் அது, இந்தப் படம் தான் என்ற சாதனையையும் படம் படைத்துள்ளது. படம் வெளியாகி 12 வது நாளில் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. படத்திற்கு வார நாட்கள் வார இறுதி நாட்கள் என எல்லா நாட்களிலும் வசூல் குறையாமல் இருந்து வருகிறது. இந்த 8000 கோடிகள் வசூல் மூலம் உலக அளவில் அதிகம் வசூல் செய்த டாப் 40 படங்களில் நே ஜா 2 இடம் பெற்றுள்ளது.

வசூலும் வரவேற்பும்: மேலும் கொரோனா காலத்திற்குப் பின்னர் உலக அளவில் அதிகம் வசூல் செய்த 8வது படமாகவும் நே ஜா 2 இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை சீனாவில் மட்டும் 159.7 மில்லியனுக்கும் அதிகமானோர் 12 நாட்களில் பார்த்துள்ளனர். அதாவது, கிட்டத்தட்ட படத்தை ஒரு கோடியே 60 லட்சம் பேர் படத்தைப் பார்த்துள்ளார்கள் என ஒரு அறிக்கை கூறுகிறது. ஒரு நாளைக்கு படம் சீனா முழுவதும் 2 லட்சத்து 32 ஆயிரம் காட்சிகள் வரை திரையிடப்படுகிறது. இந்தப் படத்தை 80 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்து உருவாக்கியுள்ளனர்.

Ne Zha 2 Ne Zha2 Box Office Box Office Record

கவனம்: படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, படத்தின் வசூல் என ஒட்டு மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகிறது. இது மட்டும் இல்லாமல், படத்திற்கு சீனாவில் மட்டும் ரூபாய் 8000 கோடிகள் வசூல் செய்து உள்ளதால், உலக அரங்கில் படத்தின் மீதான கவனம் அதிகரித்துள்ளது.

Ne Zha 2 Ne Zha2 Box Office Box Office Record

மகாராஜா: பொதுவாக சீனாவில் உள்ள திரையுலகம் முற்றிலும் வித்தியாசமானது. உலகம் முழுவதும் வேறு எங்கு தரமான படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தாலும் அந்தப் படங்களை வாங்கி, அதை சீன மொழியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தாலே, மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளார்கள். கடந்த ஆண்டில் ரிலீஸ் ஆன மகாராஜா படம், சீன மொழியில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Ne Zha 2 Ne Zha2 Box Office Box Office Record

More from Filmibeat

Read more about: box office record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X