நீ Forever திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. வந்தது சூப்பர் அப்டேட்
சென்னை: ஸென் ஸ்டூடியோஸ் சார்பில் நீ Forever என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. சுதர்ஷன் கோவிந்த் என்பவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அர்ச்சனா ரவி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். மேலும் பல சீனியர் நடிகர்களும் நடித்திருக்கும் இப்படமானது மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முன்னதாக இப்படத்தின் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ளது "நீ Forever" திரைப்படம் . "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தில் பணியாற்றுபவர்கள்: நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனியர் நடிகர்களும் இதில் இருப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எங்கெல்லாம் ஷூட்டிங் தெரியுமா?: இப்படம் சென்னையின் இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20 முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (SaReGaMa) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் எப்போது ரிலீஸ்: தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 27ஆம் தேதி இப்படமானது வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தில் அனைத்து பணிகளும் சிறப்பாக முடிந்திருப்பதாலும்; அவுட்புட்டும் நினைத்தபடி வந்திருப்பதாலும் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என படக்குழு அதீத நம்பிக்கையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications















