twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீ பாதி... நான் பாதி கண்ணே… சோக ராகத்தை துள்ளல் பாடலாக்கிய இளையராஜா!

    |

    சென்னை : கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம் பெற்ற நீ பாதி நான் பாதி கண்ணே பாடலைப்பற்றித்தான் பிளாஷ் பேக் பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

    1990ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேளடி கண்மணி

    கமலின் விக்ரம் படத்தின் போஸ்டர்.. ஏற்கனவே வெளியான படத்துடையதா இன்றைய டாப் 5 பீட்ஸில்! கமலின் விக்ரம் படத்தின் போஸ்டர்.. ஏற்கனவே வெளியான படத்துடையதா இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    இத்திரைப்படத்தில் ராதிகா, எஸ்.பி பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், அஞ்சு, கீதா, விவேக் என ஏராளமானோர் நடித்திருந்தனர்.

    அழகான பாடல்வரி

    அழகான பாடல்வரி

    நீ பாதி நான் பாதி கண்ணே.... அருகில் நீ யின்றி தூங்காது கண்ணே... இந்த பாடலுக்கு வாலி அழகாக பாடல் வரிகளை எழுதி இருப்பார். காதலை எத்தனை அழகாக வர்ணிக்க முடிமோ அந்த அழகு மொத்தமும் இருக்கும் இந்த பாடலில்.

    உமா ரமணன்

    உமா ரமணன்

    இந்த பாடலை கே.ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணனின் குரலில் மெய் மறக்க வைத்து லாபித்து மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். பாடலின் இடை, இடையே வரும் கிட்டார் பாடலுக்கு மேலும் உயிரூட்டி இருக்கும்.

    சக்கரவாக ராகம்

    சக்கரவாக ராகம்

    இந்தப்பாடலுக்கு இசைஞானி இளைய ராஜா இசையமைத்து இருப்பார். இந்த பாடலில் ஒரு சுவாரசியம் ஒளிந்துள்ளது. நீ பாதி நான் பாதி என்ற பாடலை, சக்கரவாக ராகத்தில் இசையமைத்து இருக்கிறார் இளையராஜா. இந்த ராகம் ஒரு சோகத்திற்கான ராகம். இந்த சோக ராகத்தை துள்ளல் நிறைந்த பாடலாக மாற்றி ஒரு புது புரட்சியே செய்துள்ளார் இசைஞானி இளையராஜா.

    சோகத்திற்கான ராகம்

    சோகத்திற்கான ராகம்

    அதாவது ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு பெயர் உண்டு, காலையில் பாடும் ராகம் பூபாலம், மகிழ்ச்சிக்கான ராகம் சிவரஞ்சனி அதேபோல சோகத்திற்கான ராகம் சக்கரவாகம். அதாவது, சக்கரவாகப்பறவை தன் துணையை இழக்கும் போது வருத்தத்தில் ஒரு வித ஒலியை எழுப்பும் அது கேட்பதற்கு மிகவும் சோகமானதாக இருக்கும் இதற்காக முன்னோர்கள் இந்த ராகத்திற்கு சக்கரவாக ராகம் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது.

    English summary
    Nee pathi naan pathi song flash back
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X