twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதவி இயக்குனரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை…ட்விட்டரில் அவசர உதவி கேட்ட அட்லி !

    |

    சென்னை : உதவிஇயக்குனர் ஒருவர் தந்தையின் அறுவை சிகிச்சைக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுவதாக இயக்குனர் அட்லி ட்விட்டரில் உதவி கேட்டுள்ளார்.

    ராஜா ராணி, தெறி , மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லீ.

    தமிழ் போல வாழ்வோம்.. நடிகர் கார்த்தி முதல் ஆத்மிகா வரை.தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!தமிழ் போல வாழ்வோம்.. நடிகர் கார்த்தி முதல் ஆத்மிகா வரை.தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

    தொடர்ந்து தளபதிக்கு ஹிட் திரைப்படங்களை கொடுத்து தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் அட்லி.

    வெற்றி இயக்குனர்

    வெற்றி இயக்குனர்

    சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி.

    அடுத்தடுத்த வெற்றி

    அடுத்தடுத்த வெற்றி

    ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து திரையில் தெறிக்கவிட்டு, வசூலைவாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் என அடுத்துத்து விஜய்யை வைத்து இயக்கி வருகிறார்.

    ரத்தம் தேவை

    ரத்தம் தேவை

    சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அட்லி. தனது உதவி இயக்குநரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், அதற்கு ரத்தம், அவசரமாக தேவைப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர்.

    ஏராளமான பாலோவர்ஸ்

    ஏராளமான பாலோவர்ஸ்

    அட்லியின் ட்விட்டர் பக்கத்தை சுமார் 3.3 மில்லியன் பேரும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1 மில்லியன் பாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    English summary
    Need blood for asst director fathers Surgery Atlee teet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X