பாரதிராஜாவுக்கு சுத்திப் போடனும் சொன்ன சினேகன் மனைவி.. மருத்துவமனையில் எப்படி இருந்திருக்காருனு பாருங்க

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருடன் நெருக்கமாக பழகிய பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா ஆகியோர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அவர் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுகிறார். மருத்துவமனை அறையில் இருந்தபோதும் வழக்கம்போல சிரித்துக்கொண்டே பேசும் பாரதிராஜாவை பார்த்த ரசிகர்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் கன்னிகா, பாரதிராஜா நடித்த படம் குறித்து பலரும் பாராட்டி வருவதாக கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சிரித்துக்கொண்டே இருந்த பாரதிராஜாவிடம், "உங்களுக்கு திஷ்டி சுத்திப் போட வேண்டும்" என்று கன்னிகா கூறுகிறார். அதோடு செல்லமாக அவரை தட்டியும் கொட்டியும் அன்பை வெளிப்படுத்துகிறார். அதற்கு பாரதிராஜாவும் குழந்தை மனதுடன் சிரித்தபடி பதிலளிப்பது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Need to Ward Off Evil Eyes Kannika s Emotional Video of Bharathiraja Goes Viral

வீடியோ: இதனைத் தொடர்ந்து சினேகனுடன் உரையாடும் பாரதிராஜா, அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்குகிறார். உடல்நலப் பிரச்னையால் மருத்துவமனையில் இருந்தபோதும் மன உறுதியை இழக்காமல், சுற்றியிருந்தவர்களுடன் இயல்பாக பேசி சிரித்துக்கொண்டிருந்த பாரதிராஜாவின் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

உருக்கமான பதிவு: இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கன்னிகா, மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "என் தகப்பனாரின் மரணத் துயரத்திற்கு இணையான துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது மனசு. இவரின் கரம் பிடித்தும் நடந்திருக்கிறேன். கால்பற்றியும் அழுதுமிருக்கிறேன். என் வாழ்வின் வழிநெடுக இவர் நட்டுவைத்த நினைவு மரங்கள் எல்லாம் வரிசையாய் பூத்து நிற்கிறது. எதை சொல்ல... எதைத் தள்ள..." என்று குறிப்பிட்டுள்ளார்.

Need to Ward Off Evil Eyes Kannika s Emotional Video of Bharathiraja Goes Viral

பாசம்: சினேகன் மற்றும் கன்னிகாவின் இந்த பதிவு, பாரதிராஜா மீது அவர் வைத்திருந்த பாசத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் சினேகனும் பாரதிராஜாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு குறித்து பல்வேறு நேரங்களில் பேசியுள்ளார். தன்னுடைய வாழ்க்கை மற்றும் திரைப்பயணத்தில் முக்கியமான வழிகாட்டிகளில் ஒருவராக பாரதிராஜாவை சினேகன் பலமுறை குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபோதும் உற்சாகமாக சிரித்துக்கொண்டிருந்த பாரதிராஜாவின் அந்த கடைசி காலகட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மனிதராக பாரதிராஜா இருந்தார் என்பதை இந்த வீடியோவும், கன்னிகாவின் உருக்கமான பதிவும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X