NTR: பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்.. ரிலீஸ் தேதியை இப்பவே அறிவிச்சிட்டாரே!
ஹைதராபாத்: கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாவது சாப்டர் படங்களின் மூலம் உலகளவில் ஃபேமஸ் ஆனவர் தான் இயக்குநர் பிரசாந்த் நீல். கன்னட திரையுலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை டோலிவுட்டுக்கு அழைத்து வந்து பிரபாஸ் சலார் படம் பண்ணினார். அடுத்ததாக தற்போது ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.
கேஜிஎஃப் 3 படம் எப்போது உருவாகும் என ஒரு பக்கம் கன்னட ரசிகர்கள் காத்திருக்க, சலார் 2 படத்துக்காக டோலிவுட் ரசிகர்களும் வெயிட்டிங்கில் உள்ளனர். ஆனால், அதற்கு முன்பாக அடுத்த ஆண்டு ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்குத் தான் வெயிட்டான விருந்துக் கொடுக்கப் போகிறார் பிரசாந்த் நீல்.

ஆர்ஆர்ஆர் பட வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறாத நிலையில், பிரசாந்த் நீல் உடனான கூட்டணி மீண்டும் ஒரு 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தை ஜூனியர் என்டிஆருக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎஃப் தந்த வெற்றி: 2014ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான உக்ரம் படத்தின் மூலம் இயக்குநராக மாறியவர் தான் பிரசாந்த் நீல். அதன் பின்னர், யஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் முதல் சாப்டர் படம் பான் இந்தியா வெற்றியை பெற்றது. அதன் 2வது சாப்டர் 1100 கோடி வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்தது. 2023ம் ஆண்டு வெளியான சலார் திரைப்படம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. ஆனால், அந்த படம் 1000 கோடி வசூலை தொடவில்லை.
ஜூனியர் என்டிஆர்: ராம் சரணுக்கும் ஜூனியர் என்டிஆருக்கும் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் வசூல் ரீதியாகவும் ஆஸ்கர் வரை சென்று நாட்டுக்கூத்து பாடலுக்கு ஆஸ்கர் விருதையும் அள்ளி விமர்சன ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியது. ஆனால், அதன் பின்னர் இருவரும் சோலோ ஹிட் கொடுக்க போராடி வருகின்றனர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் இந்த ஆண்டு ராம் சரணுக்கு மீண்டும் தோல்வியைக் கொடுக்க ஜூனியர் என்டிஆர் தேவரா படத்தை விட மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்து பிரசாந்த் நீல் உடன் கைகோர்த்துள்ளார்.
இந்த ஆண்டு வார் 2: ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள வார் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படத்துக்குப் போட்டியாக வெளியாகிறது. பாலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் அறிமுகமாக உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அந்த படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டும் ஜூனியர் என்டிஆர் பெரிய சம்பவத்தை பண்ண நாள் குறித்துவிட்டார்.
நீல் - என்டிஆர் பட ரிலீஸ் தேதி: அடுத்த ஆண்டு ஜூன் 25ம் தேதி பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் ஜூன் 25ம் தேதி 2026ம் ஆண்டு வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் ஜூனியர் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கேஜிஎஃப் 3ம் பாகத்தில் அஜித் குமார் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில், என்டிஆர் படத்திலும் பெரிய நடிகரின் கேமியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











