twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீலம் பண்பாட்டு மையத்தின் மார்கழியில் மக்களிசை.. சென்னை ஐஐடியில் 4வது நாள் கொண்டாட்டம்!

    |

    சென்னை: நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசையின் நான்காவது நாள் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் கோலாகலமாக நடைபெற்றது.

    Neelam Cultural Center initiated Margazhiyil Makkalisai fourth day program held in Chennai IIT

    இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி கடந்த 23 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.
    இந்நிலையில் நான்காவது நாள் நிகழ்ச்சி பெரும் மக்கள் கொண்டாட்டத்துடன் சென்னை ஐஐடியில் பறையிசை மற்றும் ஒப்பாரி பாடலுடன் தொடங்கியது.

    மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் , இயக்குனர் அதியன் ஆதிரை ,தோழர் திருமுருகன் காந்தி, தோழர் செல்வா மற்றும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் ஆகியோர் கலந்துக் கொண்டு மக்களோடு மக்களிசையை கொண்டாடினர்.

    நடிகை அமலா சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் கணம்...டீசர் அப்டேட் வெளியானது.!நடிகை அமலா சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் கணம்...டீசர் அப்டேட் வெளியானது.!

    மேலும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் அவர்கள் "உலக இசையில் பறையிசை மிக முக்கியமானது மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் எழுச்சிக்கான ஒரு மாபெரும் முயற்சியை எடுத்துள்ளார்" என்று நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார். பின்பு பேசிய இயக்குனர் அதியன் ஆதிரை "கிராமப்புற வாழ்வியலை மக்களிசையோடு தொடர்ப்பு படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது" என்று வாழ்த்து கூறினார்.

    நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட செல்வா அவர்கள் "உரிமைக்கான முழக்கம் இந்த பண்பாட்டு தளத்தில் ஒலிக்கிறது" என்று மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் இசைக் கலைஞர்களை பற்றி "நாம் எழுத வேண்டும் என்றும் இம்மக்களிசையை நாம் மிகவும் முக்கியமாக ஆவண படுத்த வேண்டும் என்றார்.

    Recommended Video

    மார்கழி மக்கள் இசையில் கலக்கப்போகும் இசைவாணி... ரசிகரின் அன்பு வேண்டுகோளுக்கு கலக்கலான பதில்

    மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் விருது கொடுத்து கௌரவித்தனர். இதனை தொடர்ந்து மார்கழியில் மக்களிசையின் ஐந்தாவது நாளாக மீண்டும் சென்னை ஐஐடி-யில் இன்று நடைப்பெற உள்ளது.

    English summary
    Neelam Cultural Center initiated Margazhiyil Makkalisai fourth day program held in Chennai IIT. Director Pa Ranjith's Neelam cultural center has started the program on 23rd December.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X