பா. ரஞ்சித்துக்காக ஒன்றிணைந்த சிம்பு - ஆர்யா.. சத்தமே இல்லாமல் ரிலீஸ் ஆகும் புதுப்படத்தின் டீசர்!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது சிறுவயதில் இருந்தே நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். தனது அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் மாபெரும் ஸ்டாராக உயர்ந்துள்ள சிம்புவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்புவின் படம் ரிலீஸ் ஆனாலும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் அவரை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் அதிகம் சர்ச்சைக்குள்ளான நடிகர் என்றாலும் அதில் சிம்பு எப்படியும் டாப் 5 லிஸ்ட்டில் இருப்பார்.

அதேபோல் நடிகர் ஆர்யாவும் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தினை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்கள் இவரது நடிப்புக்கு தீனி போட்டது என்றே கூறலாம். இதுமட்டும் இல்லாமல் இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் விமர்சனரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது மட்டும் இல்லாமல், ஓடிடி தளத்தி வெளியாகி வெற்றிப் படமாகவும் அமைந்தது.

Simbu Arya

இந்நிலையில் நடிகர் சிம்புவும் நடிகர் ஆர்யாவும் இணைந்து இயக்குநர் பா. ரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான நீலம் புரெடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பாட்டில் ராதா படத்தின் டீசரை இணைந்து வெளியிடுகின்றனர். பா. ரஞ்சித், நீலம் புரெடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

இதுவரை தயாரிப்பு: நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், முதலில் வெளியான படம், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான பரியேறும் பெருமாள் படம்தான். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், அரசியல் களத்திலும் விவாதத்தை உருவாக்கியது. நீலம் தயாரிப்பில் ஒரு படம் வெளியாகின்றது என்றாலே, சினிமா வட்டாரத்தில் தனி கவனம் பெறும். இதுவரை 7 படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

Simbu Arya

பாட்டில் ராதா: இந்நிலையில், நீலம் புரெடக்‌ஷன்ஸின் 8வது படமாக தினகரன் சிவலிங்கம் அறிமுக இயக்குநராக அறிமுகமாகும், பாட்டில் ராதா என்ற படத்தை தயாரித்துள்ளது. பலூன் பிக்சர்ஸும் இந்த படத்தை இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 24ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில், மது பாட்டிலுக்குள் நடிகர் குருசோமசுந்தரம் அரியாசனம் அமைத்து கையில் மதுவை ஏந்தியபடி அமர்ந்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கின்றார். படம் தமிழ், மலையாளத்தில் ரிலீசாகவுள்ளது.

டீசர் வெளியீடு: இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் சிம்பு மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து வெளியிடுகின்றனர். இந்த அறிவிப்பினை படக்குழு தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி, டீசர் இன்று அதாவது ஜூலை 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Simbu Arya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X