ஒரு புறம் தயாரிப்பு.. மறுபுறம் நடிப்பு.. அசத்தும் நீலிமா ராணி

சென்னை : நீலிமா ராணி பிரபல நடிகை ,தயாரிப்பாளர்,டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் தொகுப்பாளர்.

நீலிமாவை நாம் பல நாடகங்களில் பார்த்து இருப்போம் மற்றும் பல படங்களிலும் பார்த்து இருப்போம் .இவர் பல நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் .மேலும் ஒரு படம் மற்றும் ஒரு ஜி தமிழ் நாடகத்தை தயாரித்து இருக்கிறார் .

 neelima rani actes and produces

இப்படி பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து அசத்தி வரும் நீலிமா ராணி சிறுவயதில் இருந்து சினிமாத்துறைக்காக பணியாற்றி வருகிறார் .நீலிமா குழந்தை யாக பள்ளியில் பயிலும் போது விடுமுறையின் போது பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

நீலிமா தேவர்மகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .அதற்கு பின் பாண்டவர் பூமி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பின்னர் தெலுங்கு மளையளம் மற்றும் தமிழ் என்று தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்.

 neelima rani actes and produces

அதற்கு பின் நாடகங்களிலும் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்த பின் தமிழ் படங்கள் மற்றும் நாடங்களிலே தொடர்ந்து நடித்து வந்தார் .இவரின் பெரிய வெற்றி பெற்ற நாடங்களில் ஒன்று திருமுருகனின் மெட்டி ஒலி நாடகம் ,அதில் நீலிமா கிட்டதட்ட 850 எபிஸோடுகள் நடித்து இருப்பார் .நாடகத்தின் ஆரம்பம் முதல் இருதி வரை நடித்திருந்தார் என்றே கூறலாம் .

இவருக்கு சுசீந்திரனின் நான் மகான் அல்ல படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .அதை சரியாக பயன்படுத்தி கொண்ட நீலிமா நன்கு நடித்து சிறந்த துனை நடிகைகான எடிசன் விருதினை வென்றார் .கடைசியாக நீலிமா பரியேரும் பெருமாள் கதிருடன் சத்ரு படத்தில் நடித்து இருந்தார்.

கொஞ்ச நாட்களுக்கு முன் நடிப்பில் இருந்து அடுத்த பரிமானம் சென்றிருக்கிறார் நீலிமா .இவர் கே.எஸ் அதியமானின் அமலி துமலி என்ற காமெடி படத்தை தயாரித்து இருந்தார் .மேலும் தற்போது ஜி தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் நிறம் மாறாத பூக்கள் என்ற நெடுந்தொடரையும் தயாரித்து வருகிறார்.

தற்போது ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நீலிமா தனது செயல்களையும் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.சமீபத்தில் தனியார் ஊடகம் நடத்திய ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நீலிமா பாடகர் மற்றும் இயக்குனர் அருன்ராஜா காமராஜுவுக்கு விருது வழங்கினார்.

கடைசியாக தமிழில் அரன்மனை கிளி நாடகத்தில் நடித்து இருந்த நீலிமா நீண்ட வருடங்களுக்கு பிறகு மளையாள நாடகமான சக்கொயும் மரியும் எனும் நாடகத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X