காலையும் நீயே.. மாலையும் நீயே.. என் உலகமும் நீயே.. கொஞ்சும் நீலிமா!
சென்னை: செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நீலிமா ராணி.
சிறுவயதிலேயே நடிக்க வந்தவர் நீலிமா ராணி. இதன் பின் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சிறு வயதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடித்த நடிகை.

தனது சிறுவயதில் ராதிகா சரத்குமார் நடித்த தெலுங்கு சீரியலில் அறிமுகமானர் நீலிமா, பின் தமிழில் ஒரு பெண்ணின் கதை மூலம் அறிமுகமானார். பின்னர் பல சின்னத்திரை சீரியல்களில் மற்றும் படங்களில் நடித்தார்.

இவருக்கு சீரியல்களில் ஒரு நல்ல பிரேக் கொடுத்தது மெட்டி ஒலி மற்றும் கோலங்கள் தான். இதன் பின் சன் டிவியில் வந்த பல சீரியல்கள் நடித்தார் நீலிமா ராணி. திரைப்படத்தில் நான் மகான் அல்ல மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து இருப்பார். தற்போது முடிந்த வாணி ராணி மற்றும் தாமரை போன்ற சீரியல்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. பல வருடங்கள் பின் மலையாள சீரியலில் நடித்து வருகிறார் நீலிமா ராணி.

தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நீலிமா ராணி. மேலும் என் நட்சத்திரம், என் உலகம், என் சூரியன் எல்லாம் நீ தான் என்றும் நன்றாக இரு மொட்டை பாஸ் என்று பதிவிட்டுள்ளார். உலகில் அம்மாவின் பாசத்தை மீஞ்சம் அளவிற்கு எதுவும் இல்லை, நீலிமா ராணியின் குழந்தை ஒரு நல்ல வரத்தை பெற்றுள்ளது, இது போன்ற அம்மா அவருக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்று தனது நண்பர்களும் உறவினர்களும் வருகின்றனர்.

இந்த பதிவியை பார்த்ததும் புரிகிறது நீலிமா ராணிக்கு தனது மகள் தான் எல்லாம் என்று, இப்புகைப்படத்திற்கு பலரும் க்யூட், பேபி அழகாக இருக்கிறது குழந்தை என்றெல்லாம் பல பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்
நீலிமா அதனை ரசித்து கொண்டு இன்னொரு பக்கம் தயாரிப்பு வேலைகளில் மிகவும் பரபரபரப்பாக இருக்கிறார் . நிறைய சீரியல் தயாரிக்க வேண்டும் என்பது நீலிமாவின் மிக முக்கியமான மற்றொரு லட்சியம்


Click it and Unblock the Notifications











