அரிவாளைப் பார்த்து பயந்தேன்… நீலிமாவின் அனுபவங்கள்
சின்னத்திரை, சினிமா என கலந்து கட்டி நடிக்கும் நீலிமா ராணி சென்னை கோடம்பாக்கத்தில் சினிமா வாசத்தோடு பிறந்து வளர்ந்தவர்.நம்பர் 6 அஜீஸ்நகர் 2 வது தெரு கோடம்பாக்கத்தில் சிறுவயதில் இருந்தே குடியிருக்கிறாராம். 6 வயதில் தொடங்கிய சினிமா பயணம் சின்னத்திரை, பெரியதிரை என நிறைவாகப் போய்க் கொண்டிருக்கிறது.

அரிவாளைப் பார்த்து அழுதேன்
'தேவர் மகன்' படத்தில் நாசரின் மகளாக நடிக்கும் போது நீலிமாவுக்கு 6 வயதாம். கமல்ஹாசன் குட்டிப்பொண்ணாக இருந்த நீலிமாவின் கழுத்தில் அரிவாளை வைத்த உடன் பயந்து அழுதாராம். "உன்னை வெட்ட மாட்டேன் இதெல்லாம் வெறும் நடிப்புதான்" என்று கமல் ஆறுதல் சொன்ன பிறகும் நீலிமாவிற்கு பயம் போகவில்லையாம்.

சின்னத்திரையில் ஹிட் சீரியல்கள்
சினிமா, சின்னத்திரைனு இரண்டிலும் தொடர்ந்து நடித்தாலும் 'மெட்டி ஒலி' சீரியல்தான் தனக்கு பேர் வாங்கித் தந்தது என்கிறார் நீலிமா. அதுக்கு அப்புறம் கோலங்கள், இதயம், தென்றல், செல்லமே என பேர் சொல்லும் ஹிட் சீரியல்கள்ல வாய்ப்பு கிடைத்தனவாம்.

மிதிவெடியில் ஈழத்துப் பெண்
பெரிய திரையில் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தனவாம் நீலிமாவுக்கு. ஈழத்தமிழர்கள் கண்ணிவெடிகளால் எப்படி பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மிதிவெடி திரைப்படம் இவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்கிறார். ஈழத்தில் உள்ள பெண்கள் படும் துயரங்களை உணர்ந்து நடித்தாராம் நீலிமா.

நம்ப வச்சு ஏமாத்திட்டாங்களே
காதல் பாதை என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவர் என்று கூறிதான் புக் செய்தார்களாம். ஆனால் சரியாக இரண்டு மூன்று சீன்களில் கூட காட்டாமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று வருத்தப்படுகிறார் நீலிமா. இனி பெரிய திரையுலக புரடியூசர்கள், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்... என்று அட்வைஸ் வேறு செய்கிறார் நீலிமா.

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம்
நீலிமாவுக்கு ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாம்!
தொடர்ச்சியான தியானங்களால என் மனசு ரொம்ப பக்குவப்பட்ட நிலைக்கு வந்துடுச்சு. அப்பா இறந்தப்ப, தனியாளா இருந்து அவரோட இறுதி சடங்குகளை முடிக்கிற பக்குவத்தை எனக்குத் தந்ததும் அந்த பயிற்சிதான்'' என்கிறார்.

ஆளை மாற்றிய கணவர்
நீலிமாவின் கணவரும் சினிமாத்துறையை சார்ந்தவர்தானாம். இயக்குனர் கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்குநராக இருக்கும் இசைவாணன்தான் என்னோட பெட்டர் ஹாஃப் என்கிறார் நீலிமா. பாலிவுட் ஹீரோ மாதிரி பயங்கர ஸ்மார்ட்டா இருப்பார். அவரைப் பார்த்துதான் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்''னு வார்த்தைக்கு வார்த்தை கணவர் புகழ் பாடுகிறார்.


Click it and Unblock the Notifications











