கவர்ச்சி கலக்கல்... நீலிமாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் - சினிமா வாய்ப்பு கிடைக்குமா

சென்னை: சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட இன்னும் தன்னுடைய நடிப்பு பசிக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை தேடிக்கொண்டு தான் இருக்கிறார் நீலிமா ராணி. வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார் நீலிமா.

நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பாகி விடும். இதற்கு நல்லதொரு உதாரணம் நம்முடைய நீலிமா ராணி.

பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆசை இன்னும் குறையவே இல்லை. பல பேர், நீலிமா இன்னும் திருமணம் ஆகாத பொண்ணு என்று நினைத்து சைட் அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் நீலிமாவின் உடல் அமைப்பு.
வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமா பசிக்கு தீனி தேடி கொண்டு இருக்கிறார் நீலிமா.

நீலிமா ராணி

நீலிமா ராணி

சினிமா விழாக்கள் நடக்கும் பொழுது, ஆங்க்கரிங் செய்வது இவருக்கு மிகவும் பிடிக்கும். அப்படி சில விழாக்களில் கை குழந்தையுடன் இருக்கும் பொழுது, தன் குழந்தையை கார் ஏ.சியில் வீட்டுப் பணிப்பெண்ணிடம் கொடுத்து விட்டு ஒவ்வொரு 5 நிமிடமும் மேடைக்கும் காருக்கும் ஓடி ஓடி வேலை செய்வார் நீலிமா. கலை தாகம் கொண்ட இந்த பெண்ணுக்கு எப்போ தான் சினிமா உலகம் பெரிய கம்பளம் விரிக்க போகுதோ தெரியவில்லை.

குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்

குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இந்த படத்தை தொடர்ந்து, பாண்டவர் பூமி, விரும்புகிறேன் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், தம், மொழி, நான் மகான் அல்ல ஆகிய படங்களில், குணச்சித்திர வேடங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கணவர் குழந்தைகள்

கணவர் குழந்தைகள்

இவருக்கு பெரிதும் உதவியாகவும் மிக பெரிய பக்க பலமாகவும் இருப்பது இவரது கணவர் இசை. நீலிமாவின் குழந்தை இப்போது கொஞ்சம் பெரியவள் ஆக ஆக நீலிமாவுக்கு மீண்டும் வேகமும் தாகமும் அதிகமாகி விட்டது.

டிவிட்டரில் புகைப்படங்கள்

கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள நீலிமா, தற்போது சமூக வலைதளத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடுக்கி கொண்டு இருக்கிறார்.

கவர்ச்சி கலக்கல்

கவர்ச்சியில் கலக்கலாக புகைப்படங்கள் எடுத்து தான் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கவும் ரெடி என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். முன்பெல்லாம் பிஆர்ஓ மூலம் மேனேஜர் மூலம் சினிமா வாய்ப்பு தேடுவது போய் இப்போது சோசியல் மீடியா மூலம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடுகின்றனர். நீலிமா ராணியின் இந்த அப்ரோச் சினிமாவிலும் மீடியா உலகிலும் கை கொடுக்குமா பொறுத்து இருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X